வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

த்ரிஷா என்ட்ரியால் சினிமாவை விட்டு விலகும் லேடி சூப்பர் ஸ்டார்.. புதுசா தொழில் தொடங்கிய நயன்-விக்கி

Nayanthara – Trisha : இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு கூட கால் சீட் கொடுக்க முடியாமல் படு பிஸியாக சுற்றிக் கொண்டிருந்த நயன்தாராவுக்கு, திருமணத்திற்கு பிறகு வாய்ப்புகள் மொத்தமாக டல் அடிக்க ஆரம்பித்து விட்டது. அதே நேரத்தில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்க்கெட்டே இல்லாமல் இருந்த திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு யோகம் அடித்து விட்டது.

நயன்தாரா பாலிவுட் கனவில் தென்னிந்திய சினிமாவை கண்டு கொள்ளாமல் இருந்த நேரத்தில், த்ரிஷா அவருடைய வாய்ப்பு மொத்தத்தையும் அள்ளிவிட்டார். அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகிவிட்டார். ஜவான் பட ரிலீஸ்க்கு பிறகு பாலிவுட்டில் வாய்ப்புகள் கொட்டும் என எதிர்பார்த்த நயன்தாராவுக்கு மொத்தமும் அம்போ என போய்விட்டது.

Also Read:40 வயதிலும் ஹீரோயினாக ஜொலிக்கும் திரிஷாவின் 5 படங்கள்.. உச்சத்தில் இருக்கும் ஹீரோக்களை வளைத்துப் போட்ட குந்தவை

இனி சினிமாவையே நம்பி இருந்தால் வேலைக்கு ஆகாது என வேறொரு திட்டத்தில் இறங்கி விட்டார்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி. ஏற்கனவே நயன்தாரா பல தொழில்களில் முதலீடு செய்து வந்தார். இவருடைய தொழில் முதலீடுகள் எல்லாம் துபாயில் செய்யப்படுவதாக கூட செய்திகள் வெளியாகியாது. இந்நிலையில் மீண்டும் புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார் நயன்தாரா.

9ஸ்கின் என்ற பெயரில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி. இயற்கை முறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சருமத்திற்கு எந்த பாதிப்பும் வராத வகையில் இந்த அழகு சாதன பொருட்கள் உருவாக்கப்படுகிறது என்றும், இது எங்களுடைய ஆறு வருட முயற்சி என்றும் நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Also Read:திருட்டுத்தனமாக அறையில் வைக்கப்பட்ட கேமரா.. திரிஷா போல் சிக்காமல் எஸ்கேப்பான நடிகை

ஏற்கனவே இந்த தம்பதி சாய் வாலா என்னும் தேநீர் நிறுவனத்தின் மீது முதலீடு செய்திருந்தது. அதேபோன்று இயற்கை முறையில் லிப் பாம் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கி இருந்தது. எந்த கெமிக்கலும் இல்லாமல் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவது தான் இந்த லிப் பாம் என விளம்பரங்களும் கொடுக்கப்பட்டது.

பல தொழில்களில் முதலீடு செய்வதோடு அடுத்தடுத்து சொந்த நிறுவனத்தையும் தொடங்கி வரும் நயன்தாரா, இந்த 9 ஸ்கின் ப்ராடக்ட் கம்பெனியை வரும் செப்டம்பர் 29 முதல் தொடங்க இருக்கிறார். இனி சினிமாவை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த இவர், சம்பாதித்த காசை எல்லாம் பல மடங்கு ஆக்க விவரமாக திட்டமிட்டு வருகிறார்.

nayanthara-9skin
nayanthara-9skin

Also Read:39 வயது நடிகருக்கு அம்மாவாகும் திரிஷா.. இது என்ன குந்தவைக்கு வந்த சோதனை

Trending News