பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் த்ரிஷா மீண்டும் ஒரு ரவுண்டு வர தயாராகி விட்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கும் அவர் குந்தவை கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் களவாடி சென்று விட்டார்.
அந்தப் படத்திற்குப் பிறகு தாறுமாறாக மார்க்கெட் ஏறி இருக்கும் த்ரிஷாவுக்கு இப்போது தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த இந்த ஜோடி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்துள்ளது.
Also Read : நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய திரிஷா.. எதிரும் குந்தவை மார்க்கெட்
ஆனால் அந்த வாய்ப்பு இப்போது த்ரிஷாவுக்கு நிரந்தரமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் தற்போது அவர் நடித்து முடித்துள்ள ராங்கி திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே வெளிவந்த இந்த படத்தின் டிரைலரில் திரிஷா படு லோக்ககக டபுள் மீனிங் வசனம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.
தற்போது இந்த படத்தின் பிரமோஷனில் பிசியாக இருக்கும் திரிஷா எப்படியாவது இந்த படத்தை வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்று தீயாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம். ஏனென்றால் சமீபத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த கனெக்ட் திரைப்படம் தோல்வி அடைந்துள்ளது. இதற்காக நயன்தாரா தியேட்டர் தியேட்டராக சென்று கூட பயன் இல்லை.
Also Read : 14 வருடம் கழித்து தயாரிப்பாளரிடம் மல்லு கட்டிய விஜய்.. கிள்ளி கேட்ட திரிஷாவுக்கு அள்ளிக் கொடுத்த தளபதி!
இதைப் பார்த்து பதறிப் போன திரிஷா தன்னுடைய படமும் தோல்வியடைந்து விட்டால் தளபதி 67 படத்தின் வாய்ப்பு பறிபோய்விடும் என்ற உச்சகட்ட பயத்தில் இருக்கிறாராம். அதனாலேயே இப்போது பரபரப்பாக இப்படத்தை பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் இந்தப் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையதளத்தையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

வயதானாலும் அழகும், இளமையும் மெருகேறி இருக்கும் த்ரிஷாவை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். ஆனாலும் இப்படம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது. அந்த வகையில் இளவரசி குந்தவை விஜய்க்கு ஜோடியாக நடிப்பாரா என்பது கேள்விக்குறிதான். வரும் டிசம்பர் 30ஆம் தேதி திரிஷாவின் ராங்கி திரைப்படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Also Read : கல்யாணம் பண்ணாமலே வாழ்கையை ஓட்டும் திரிஷா.. முத்தின கத்திரிக்காவின் ரகசியம் உடைந்தது