Director Nelson: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. தற்போது அனைத்து பக்கங்களிலிருந்தும் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு காட்சியிலும் தலைவரை பார்க்கும் பொழுது உடம்பெல்லாம் சிலிர்த்து விடுகிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையில் நெல்சன் நேற்று ரஜினியையும், ஜெயிலர் படத்தையும் பற்றிய விஷயங்களை வெளியிட்டு இருந்தார். அதாவது என் மேல் முழு நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. அத்துடன் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக கண்டிப்பாக ஜெயிலர் படம் வெற்றி அடையும் என்று கூறியிருக்கிறார்.
இவர் சொல்வதைப் போல் தான் தற்போது எல்லா பக்கமும் பாசிட்டிவ் ரிவ்யூ வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் படத்தைப் பற்றியும் சில வார்த்தைகளை பேசி இருக்கிறார். அதாவது டாக்டர் படத்தை முடித்த கையோடு எனக்கு விஜய் படத்திற்கான கால்ஷீட் கிடைத்து விட்டது.
பீஸ்ட் படத்திற்கு எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. அதனால் அவசர அவசரமாக கதையை தயார் செய்யும் நிலைமை ஆகிவிட்டது. மேலும் சூட்டிங் ஸ்பாட்டிலும் நாங்கள் ரொம்பவே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டுத்தனமாக கிரிக்கெட் தான் விளையாடிட்டு வந்தோம்.
Also read: நண்பனுக்காக தயாரிப்பாளராகும் நெல்சன்.. எல்லாம் ஜெயிலர் கொடுக்குற தைரியம்
அதுவே பீஸ்ட் படத்திற்கு மிகப்பெரிய சரிவாக நான் பார்க்கிறேன் என்று பேசி இருக்கிறார். ஆனால் ஜெயிலர் படத்தை பொருத்தவரை எனக்கு போதுமான நேரம் நன்றாகவே கிடைத்தது. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பண்ணினேன். ரஜினி சாரும் என்னுடைய இஷ்டத்திற்கு அனைத்தையும் விட்டுவிட்டார்.
அது மட்டுமின்றி சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி எனக்கு நிறைய நேரம் கொடுத்து என்னை யோசிக்க வைத்தார். எனக்கு எல்லா விதத்திலும் ஒரு கம்போர்ட் சோனை உருவாக்கித் தந்தார். எனக்கு எந்த விதத்திலும் நெருக்கடியை ரஜினி கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க இது என்னுடைய படமாகவே எடுப்பதற்கு அனுமதி கொடுத்தார் என்று ரஜினியை பற்றி கூறியிருக்கிறார்.