தீபாவளி ரேசில் கவினின் பிளடி பக்கர் படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை சிவபாலன் முத்துக்குமார் என்பவர் இயக்குகிறார். இதை தயாரிப்பது கவின் நண்பரான இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் படங்களுடன் மோதுகிறது.
பிளடி பக்கர் படம் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கவின் நடித்ததில் இதுதான் அதிகமான பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் அவருடன் சேர்ந்து ரெட்டின் கிங்ஸ்லி நடித்துள்ளார். இருவரும் சேர்ந்து காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கவின் மற்றும் நெல்சன் இருவரும் விஜய் டிவி பின்புலத்திலிருந்து சினிமாவிற்குள் வந்தவர்கள். அதனால் முதல் உரிமை விஜய் டிவிக்கு தான் கொடுப்பார்கள். இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவிக்கு கொடுப்பதாக டீல் பேசியுள்ளனர். ஆனால் விஜய் டிவி கேட்ட அடிமாட்டு விலை தான் அவர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடுமி பிடியால் கடவுள் காட்டிய பச்சைக்கொடி
பிளடி பக்கர் படத்திற்கு விஜய் டிவி சேட்டிலைட் டிஜிட்டலுக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக டீல் பேசியுள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை அற்ப தொகைக்கு கொடுப்பதற்கு நெல்சனுக்கு மனதில்லை. அதனால் ஜெயிலர் படம் நெருக்கம் காரணமாக கலாநிதியுடனையே நேரடியாக பேசி விட்டார்.
இப்பொழுது ஜெயிலர் 2 ஆம் பாகம் வேறு எடுக்கப் போகிறார். இதனால் கலாநிதி, நெல்சன் பேசிய டீலுக்கு சம்மதித்துள்ளார். கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கு இந்த படத்தை சன் டிவி வாங்கியுள்ளது. ஆண்டவன் கலாநிதியே நம்ம பக்கம் என்று பூசாரி விஜய் டிவிக்கு மரண காட்டு காட்டியுள்ளார் நெல்சன்.
- ரஜினிக்கு வில்லன் எல்லாம் ஓல்டு ஸ்டைல்
- ரஜினி ரிஜெக்ட் பண்ணியவர்க்கு சிவகார்த்திகேயன் கொடுக்கும் வாழ்வு
- டாப் ஸ்டார் படத்தில் கேமியோவாக ரஜினி நடிப்பாரா.?