Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தனுஷுக்கு நோ, சிம்புக்கு மட்டும் எஸ்ஸா.? ஓரவஞ்சனை காட்டும் நெல்சன்

தனுஷுக்கு நோ, சிம்புக்கு மட்டும் எஸ்ஸா.? ஓரவஞ்சனை காட்டும் நெல்சன்

Nelson Dilipkumar : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கிறது. இந்த சூழலில் […]

Nelson Dilipkumar : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு கூடுதலாக இருக்கிறது.

இந்த சூழலில் தனுஷுக்கு மட்டும் நோ சொல்லிவிட்டு சிம்புவுக்கு எஸ் சொல்லி இருக்கிறார் நெல்சன். அதாவது தனுஷ் இயக்கி, நடிக்கும் படம் தான் இட்லி கடை. இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நெல்சனை நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் தனுஷ்.

அதாவது அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என நெல்சனிடம் கேட்ட நிலையில் அவர் ஜெயிலர் 2-வில் பிசியாக இருப்பதாக கூறிவிட்டாராம். ஆனால் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நெல்சன் நடிக்கிறார்.

தனுஷுக்கு மட்டும் நோ சொன்ன நெல்சன்

அதுவும் இயக்குனராகவே அவர் நடிக்கிறாராம். இதற்காக பத்து நாட்கள் வெற்றிமாறன் கால்ஷீட் கேட்டிருக்கிறார். மேலும் ப்ரோமோ சூட்டிலும் நெல்சன் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. தனுசுக்கு மட்டும் முடியாது என்று சொல்லிவிட்டு இப்போது சிம்பு படத்தில் ஏன் நடிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதாவது சினிமாவில் நெல்சன் அறிமுகமாகும் போது சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை எடுத்து வந்தார். சில காரணங்களினால் அந்த படம் பாதியிலேயே டிராப் ஆனது. அதன் பிறகு தான் நெல்சன் வேறு படங்களை இயக்கி சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வருகிறார்.

தனக்கு முதன் முதலில் சிம்பு தான் வாய்ப்பு கொடுத்ததால் இப்போதும் நன்றி மறக்காமல் அவர் கூப்பிட்ட உடனே அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். மேலும் தற்போது வரை சிம்பு மற்றும் நெல்சன் இடையே ஒரு நல்ல உறவு இருந்து வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.