சூப்பர் ஸ்டாரின் நம்பிக்கையை பெற முடியாத நிலையில் நெல்சன்.. அடுத்த கட்ட முடிவு என்ன

கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி இடத்துக்கு வந்த நெல்சன் பீஸ்ட் திரைப்படத்தால் சற்று சறுக்கலை சந்தித்துள்ளார். மிகக்குறுகிய காலத்திலேயே விஜய் போன்ற முன்னணி நடிகரை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை அவரின் மேல் இருக்கிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் நெல்சனுக்கு சூப்பர் ஸ்டாரிடம் இருந்து நம்பிக்கையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டாரை வைத்து தலைவர் 169 திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் பலரும் மீம்ஸ், ட்ரோல் போட்டு கலாய்த்தது தான் இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதையெல்லாம் பார்த்த ரஜினிகாந்த் இந்த வாய்ப்பை நெல்சனுக்கு தர வேண்டுமா என்ற ஒரு குழப்பத்தில் இருக்கிறாராம்.

மேலும் தலைவர் 169 திரைப்படத்தின் கதையை தனக்கு ஏற்றவாறு தயார் செய்து அதை இயக்கும் பொறுப்பை மட்டும் நெல்சனுக்கு தரலாம் என்ற ஒரு முடிவிலும் சூப்பர் ஸ்டார் இருக்கிறார். இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை கேள்விப்பட்ட நெல்சன் தற்போது இந்த படத்தில் இருந்து முழுவதுமாக விலகி விடலாம் என்ற ஒரு எண்ணத்திலும் இருக்கிறாராம்.

ஆனால் அவர் அப்படி செய்தால் இனி வரும் காலங்களில் சினிமாவில் அவருக்கான வாய்ப்பு கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் நெல்சன் இந்த விஷயத்தை பொறுத்தவரை சற்று அமைதியாக இருந்து சுமுகமாக முடித்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

விளையாட்டுத்தனமாக படத்தை இயக்கி விட்டு தற்போது சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிக்கும் அவரைப் பற்றிதான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ஒரு இளம் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →