Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

வெயிலில் உக்கிரம், நிழலில் நெல்சன்.. ரகசியத்தை உடைத்த வெற்றிமாறன்

வெயிலில் உக்கிரம், நிழலில் நெல்சன்.. ரகசியத்தை உடைத்த வெற்றிமாறன்

Nelson Dilipkumar : வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது உறுதியான நிலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது ப்ரோமோ ஷூட் தான் எடுத்திருக்கிறார்களாம். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் […]

Nelson Dilipkumar : வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது உறுதியான நிலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது ப்ரோமோ ஷூட் தான் எடுத்திருக்கிறார்களாம். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் வெளியாகியிருந்தது. வெளியில் உக்கிரமாக இருக்கும் நிலையில் குடையை பிடித்துக் கொண்டு நிழலில் நெல்சன் இருந்த புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்டானது.

அதாவது சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தில் நெல்சன் எதற்காக இருக்கிறார் என்ற கேள்வி தான் எழுந்தது. இப்போது புகைப்படம் வெளியானதை அடுத்து இதுகுறித்து உண்மையை வெற்றிமாறன் வெளியில் கூறியிருக்கிறார்.

வெற்றிமாறன் படத்தில் நெல்சனின் கேரக்டர்

அதாவது வெற்றிமாறன் படத்தில் நெல்சன் அவராகவே வருகிறாராம். அதாவது ஒரு இயக்குனராக வருகிறார் என்பதை கூறியிருக்கிறார். மேலும் அந்த காட்சிக்காக கிட்டத்தட்ட 10 நாட்கள் நெல்சன் இடம் கால்ஷீட் கேட்டிருக்கிறாராம்.

நெல்சனின் கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்சன் தன்னுடைய படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்வது வழக்கம் தான். இப்போது வேறு ஒரு நடிகரின் படத்தில் ஒரு கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார்.

மேலும் ரஜினியை வைத்து ஜெயிலர் 2 படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. நெல்சன் அதை பூர்த்தி செய்கிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.