வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கிள்ளி கொடுத்த சினிமா, அள்ளி கொடுத்த ஆண்டவர்.. கமலின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Kamal Net Worth: உலக நாயகன் கமலஹாசன் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சினிமா தான். தன்னை வளர்த்து விட்ட சினிமாவுக்கு தான் செய்ய வேண்டும் என்று இப்போது வரை சமாதித்த அனைத்து சொத்துக்களையுமே சினிமாவில் தான் முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் 69 வயதில் கமலின் மொத்த சொத்து மதிப்பை பார்க்கலாம்.

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கமலின் சொத்து மதிப்பை எடுத்துக் கொண்டால் 50 மில்லியன் மட்டும் தான். கிட்டத்தட்ட 230-க்கும் அதிகமாக படங்களில் நடித்திருந்த கமல் இவ்வளவுதானா சொத்து சேர்த்து வைத்துள்ளாரா என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாக தான் இருந்திருக்கும். நிறைய படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய ஹிட் படங்கள் என்றால் அவருக்கு மிகவும் குறைவு தான்.

ஏனென்றால் முற்போக்கு சிந்தனை கொண்ட கமல் அதுபோன்ற படங்கள் தான் தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த சமயத்தில் வசூல் ரீதியாக படம் தோல்வி பெற்றாலும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமலின் நிறைய படங்கள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அவருடைய அன்பே சிவம், தேவர்மகன், ஹேராம் படங்கள் அதன் பிறகு தான் வரவேற்பு பெற்றது.

Also Read : மாயாவின் முகத்திரையை கிழித்தெறிந்த அழுமூஞ்சி அர்ச்சனா.. சூனியக்காரியின் தவறை தட்டிக் கேட்காத கமல்

ஆனால் 2022-க்கு பிறகு கமல் விஸ்வரூப வளர்ச்சி அடைந்தார். அதாவது லோகேஷ் உடன் கமல் முதல் முறையாக கூட்டணி போட்ட நிலையில் விக்ரம் படம் அந்த ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. அதன் பிறகு தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் கமல் நிறைய படங்களை தயாரிக்க ஆரம்பித்து இருந்தார்.

அதோடு மட்டுமல்லாமல் சில விவசாய நிலங்களிலும் கமல் முதலீடு செய்திருக்கிறார். அதன்படி 2023 ஆம் ஆண்டு கமலின் சொத்து மதிப்பு அப்படியே டபுள் மடங்காக மாறி இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 100 மில்லியன் சொத்து மதிப்பு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால் அதன் மூலமும் தமிழுக்கு பெரும் தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. மேலும் கமலிடம் விலை உயர்ந்த கார் வகைகள் நிறைய இருக்கிறது.

அந்த வகையில் BMW 730LD மற்றும் Lexus Lx 570 ஆகிய கார்களும் கமல் வசம் இருக்கிறது. ஆனால் ரஜினி, விஜய் போன்ற நடிகர்களை விட சினிமாவிலேயே திளைத்த கமலின் சொத்து மதிப்பை ஒப்பிடும்போது குறைவு தான். இவ்வாறு சினிமா கமலுக்கு கிள்ளி கொடுத்தாலும், அவர் எப்போதுமே சினிமாவுக்கு அள்ளி கொடுத்து தான் வருகிறார்.

Also Read : கமல் ரஜினிக்காக அடித்துக் கொள்ளும் சந்தானம்.. 80ஸ் பில்டப் அலப்பறையான டீசர்

Trending News