வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மிச்ச இருந்த மானத்தை நெட்பிளிக்ஸ் வாங்கிட்டான்.. லியோவால் விஜய்க்கு ஏற்பட்ட அவமானம்

Leo – Netflix : லியோ படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியான நிலையில் நவம்பர் 27ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்தில் ரசிகர்கள் இரண்டாம் பாதி மூலம் ஏமாற்றத்தை சந்தித்திருந்தனர்.

அதனால் எதிர்பார்த்த வசூலும் படம் பெறவில்லை. இந்நிலையில் ஓடிடியில் லியோ படம் வெளியாகி உள்ள நிலையில் தினமும் ஒவ்வொரு போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் இந்நிறுவனம் பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் நெட்பிளிக்ஸ் இன்று ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது.

லியோ படத்திற்கு இருந்த மிச்ச மானத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கி விட்டது. அதாவது லியோ படம் ஏமாற்றத்தை சந்திக்க காரணமே எல்சியுவை இதில் கொண்டு வந்தது தான். அதிலும் கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியன் லியோ படத்திலும் நெப்போலியன் என்ற அதே போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also Read : லியோ போல் செய்ய வேண்டாம்.. விடாமுயற்சிக்கு அஜித் போட்ட கட்டளை

கைதி படத்தின் இவரது கதாபாத்திரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் லியோ படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த சூழலில் அவருடைய புகைப்படத்தை நெட்பிளிக்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது.

ஏற்கனவே எல்சிவால் படம் சொதப்பிவிட்டது என ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் மேலும் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் இருக்கிறது. இந்நிலையில் லியோ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிய நிலையில் விரைவில் ஆங்கிலத்திலும் வெளியாக இருக்கிறது.

netflix-leo
netflix-leo

Also Read : 3 பேருக்கு அஜித் செய்த கைமாறு.. அதயும் ட்ரெண்டாக்கி கல்லாக்கட்டும் ஜெயிலர், லியோ படக்குழு

Trending News