மகாராஜாவின் அந்த ஒரு சீனுக்கு ஈடாகாது இந்தியன் 2 மொத்த படமும்.. 600 கோடி பட்ஜெட்ல லைகாக்கு நாமத்தை போட்ட ஷங்கர் ஜி

Indian 2: சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்தியன் 2 படம் தமிழ் சினிமா ரசிகர்களின் நாடி பிடித்து பார்த்திருக்கிறது. 600 கோடி செலவில் செய்யப்பட்ட டெஸ்டிங் தான் இந்த படம். ரசிகர்களின் பார்வையில் கதை இல்லாத பிரம்மாண்டமும், வெற்றி நாயகனும் இனி செல்லுபடி ஆக மாட்டார்கள் என்பதை நிரூபித்திருக்கிறது.

சினிமாவின் என்சைக்ளோபீடியா என அழைக்கப்படும் கமலஹாசன் எதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பற்றி யோசிக்காமல் இந்த படத்தில் வேலை செய்தார் என்பதுதான் பெரிய சந்தேகம் கிளம்பி இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் இந்தியன் 2 படத்தை சமீபத்தில் வெளியான மகாராஜா படத்துடன் ஒப்பிட்டு நிறைய சினிமா விமர்சகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மகாராஜா படம் ஒரு சாதாரண புள்ளியில் ஆரம்பித்து அதன் பின்னர் 1000 திருப்பங்களுடன் முடிந்திருக்கும்.

அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதியிடம் வளரும் பெண் தன்னுடைய மகள் என தெரிந்ததும் அனுராக் குழம்பி துடிப்பது ஒரு பெரிய கிரீடத்தின் மீது வைத்த ரத்தினக்கல் போன்றது. அது மட்டும் இல்லாமல் போலீஸ் கேரக்டரில் இருக்கும் நட்டி இவை என்ன பண்ணினாலும் விற்றலாமா என்று பத்து முறைக்கு மேல் கேட்பார்.

விட்டுரலாம் என்று விஜய் சேதுபதி சொன்னதும் உன் பொண்ண ஏதாவது செஞ்சிருந்தா கூட விட்டுறலாமா என கேட்பார். ஒட்டுமொத்த ஆடியன்ஸ்களுக்கும் மெய்சிலிர்க்கும். மாடியில் இருந்து கீழே விழுவார் அனுராக், அவருடைய ரத்தம் அந்தப் பெண்ணின் கால் பாதம் பட்ட ஈரமான மண்ணில் வந்து தொடும்.

மகாராஜாவின் அந்த ஒரு சீனுக்கு ஈடாகாது இந்தியன் 2 மொத்த படமும்

ஒரு சின்ன பிரேமில் ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒன்றாக கொண்டு வந்து விட்டார் இயக்குனர் நித்திலன். இப்படி ஒரு காட்சியை இந்தியன் 2 படத்தில் எடுத்து சொல்ல முடியுமா. இந்தியன் முதல் பாகத்தின் பெரிய பாசிட்டிவ் அதன் பாடல்கள் தான்.

maharaja
maharaja

ஆனால் இரண்டாம் பாகத்தில் பாட்டையும் போட்டு கொலை செய்து வைத்திருக்கிறார்கள். அனிருத்தின் சினிமா எதிர்காலத்தை இந்தியன் தாத்தா கதற விட்டுவிட்டார். கதையே இல்லாமல் எதற்காக இப்படி ஒரு பிரம்மாண்டம்.

கருப்பு பணத்தை வெள்ளையாக்க இது போன்ற படங்கள் எடுக்கப்படுகின்றன என பலர் குற்றச்சாட்டு வைக்கின்றனர். சங்கருக்கு என்னதான் ஆச்சு. அவர் இதற்கு முன்பு பிரம்மாண்ட படங்கள் எடுத்தார் ஆனால் அதில் நல்ல கதையும் இருந்தது.

அப்போது தொழில்நுட்பங்கள் வளராத காலம். ஷங்கர் படத்தை பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம். முதல்வன், ஜென்டில்மேன் போன்ற படங்களை இயக்கிய ஷங்கர் இப்போது பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி படம் எடுப்பது தான் கவலையாக இருக்கிறது.

மேலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி பெரிய தோல்வியை தழுவுகின்றன. இதனால் கண்டிப்பாக இனி இரண்டாம் பாகம் எடுக்கிறேன் என எந்த இயக்குனரும் முன் வரப்போவதில்லை.

நல்ல ஒரு கதைக்களம், வயிறு குலுங்க சிரிக்க வைக்க காமெடி, சிந்திக்க வைக்க திரைக்கதை, திருப்பங்கள், நல்ல நடிகர்கள், மனதில் நிற்கும் கேரக்டர்கள், முணுமுணுக்க வைக்கும் பாட்டுக்கள் இதைத்தான் தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை தாண்டிய பிரம்மாண்டம் உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பதை தான் நமக்கு உணர்த்துகிறது.

இந்தியன் 2 வசூலில் விழுந்த அடி

Next Story

- Advertisement -