செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தால் இளையராஜாவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

Manjummel Boys: ‘ மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’ என்ற பாடல் வரிகள் தான் இப்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் நம் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது. கேரளாவில் ரிலீஸ் ஆகி சமீபத்தில் 100 கோடி கிளப்பில் இணைந்து இருக்கும் லோ பட்ஜெட் படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த படம் ஒரு யதார்த்தமான திரை கதையோடு எடுக்கப்பட்டு, இப்போது 30 வருடங்களுக்கு முன் ரிலீசான குணா படத்தின் பிரமோஷன் படமாக மாறிவிட்டது.

ஒரு 11 நண்பர்களை சுற்றி பின்னப்பட்ட திரைக்கதை, குணா படத்தின் பாடலால் வேற லெவல் வரவேற்பை பெற்றிருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் சமூக வலைத்தளங்களில் கண்மணி அன்போடு பாடல் ட்ரெண்டான பிறகு தான் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து, வசூலில் பெரிய சாதனை படைத்து வருகிறது. மேலும் உலகநாயகன் கமலஹாசன் இந்த பட குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியதும் படத்தின் வெற்றிக்கான பெரிய காரணம்.

ஒரு பக்கம் மஞ்சும்மல் பாய்ஸ் படம், மறுபக்கம் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என நெட்டிசன்கள் குதூகலமாக இருந்து வரும் நேரத்தில் மெதுவாக இசையமைப்பாளர் இளையராஜாவின் தலை உருள ஆரம்பித்திருக்கிறது. இந்த படத்திற்கும் இளையராஜா பிரச்சினையில் மாட்டியதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்கள் அப்படியே ஃபிளாஷ்பேக்கிற்கு போய் 96 பட சமயத்தில் நடந்த அக்கப்போரை நினைவு கூற வேண்டும்.

Also Read: இளையராஜாவின் கடைக்குட்டி மகனின் சொத்து மதிப்பு.. 16 வயதிலிருந்து சம்பாதித்து சேர்த்து வைத்த யுவன்

96 படத்தில் வரும் கரை வந்த பிறகு, காதலே காதலே தனிப்பெரும் துணையே போன்ற பாடல்களின் இன்று வரை பிளே லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது. படத்தின் கதைப்படி ஹீரோயின் பள்ளி பருவத்தில் படிக்கும் பொழுது நன்றாக பாடக்கூடியவர், இதை மையமாக வைத்து தான் அந்த காதல் கதை அமைந்திருக்கும். இந்தப் பட கதை 90களில் காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பதால் ஹீரோயின் பாடும் பாட்டுக்கள் எல்லாமே இளையராஜாவின் இசையில் அமைந்தவைகளாக இருக்கும்.

96 படத்தை எல்லோரும் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, என்னுடைய பாடல்களை தங்களுடைய படங்களில் உபயோகிப்பவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று பெரிய நெகட்டிவ் விமர்சனத்தை முன்வைத்தார் இளையராஜா. இதற்கு எந்த கோபமும் படாமல் படத்தின் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் மூலம் நான் என்றுமே இளையராஜாவின் ரசிகன் என தன்னுடைய பதிலை முடித்துக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில காட்சிகளில் ஹீரோயின் அவருடைய பாடுகளை பாடுவது போல் இருந்ததற்கே கொதித்து தவறான வார்த்தையை உபயோகித்து இருந்தார் இளையராஜா. அப்படி இருக்கும்போது, இந்த மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் கிளைமாக்ஸ் இல் வரும் கண்மணி அன்போடு பாடல் தான் படத்தின் மொத்த வெற்றியை தாங்கி நிற்கிறது. ஆனால் இதுவரை அதை பற்றி அவர் வாய் திறக்காமல் இருப்பது தான் இப்போது நெட்டிசன்கள் டென்ஷனானதற்கு காரணம்.

Also Read:நடக்க கூடாதுன்னு நினைத்ததை பிள்ளையார் சுழி போட்ட இளையராஜா.. தனுஷ் பிரண்டுக்கு காட்டிய பச்சக்கொடி

Trending News