சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

காசுக்காக பச்சை பொய் சொன்ன த்ரிஷா.. ஆதாரத்துடன் கிழித்தெடுத்த பிரபல பாடகர்!

Trisha: நடிகை திரிஷா பற்றிய பிரபலம் ஒருவர் ஆதாரத்துடன் சொல்லி இருக்கும் கருத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்று சொல்வார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது திரிஷாவின் இப்போதைய நிலைமை.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தென்னிந்திய ரசிகர்கள் அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் திரிஷா.

பச்சை பொய் சொன்ன த்ரிஷா

அதன் பின்னர் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகி நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார். இருந்தாலும் ரிஷா மீது விஜய் ரசிகர்களுக்கு ஒரு விதமான வெறுப்பு சமீப காலமாக உருவாகி இருக்கிறது.

இதற்கு காரணம் விஜயை த்ரிஷாவுடன் இணைத்து பேசுவதற்கு அவரே தீனி போடுவது தான். இந்த பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் திரிஷா.

நடிகை திரிஷா சமீபத்தில் தன்னுடைய X அக்கவுண்ட் ஆகிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பு அவருடைய எக்ஸ் பக்கத்தில் இருந்து கிரிப்டோ கரன்சி தொடர்பாக நிறைய விளம்பரங்கள் வந்தன.

இது குறித்து அமெரிக்க பாடகர் ஒருவர் இதற்கு முன்னதாகவே கருத்து தெரிவித்திருந்தார்.

கான்வே வெஸ்ட் என்பவர் சமீப காலமாக பிரபலங்கள் சில பொருட்களுக்கு தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்கிறார்கள்.

அதன் பின்னர் அந்தப் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக அறிவித்து விடுகிறார்கள். இது போன்ற விளம்பரங்களுக்கு ஏகப்பட்ட சன்மானம் அவர்களுக்கு கிடைக்கிறது என்று சொல்லி இருந்தார்.

இதே விஷயத்தை தான் திரிஷா செய்திருக்கிறார் என தற்பொழுது நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending News