சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

வாழ்க்கையில் மிஸ் பண்ணக்கூடாத 10 மலையாள த்ரில்லர் படங்கள்.. திடுக்கிடும் மர்மம் நிறைந்த ‘சி யூ சூன்’

இந்திய சினிமாவின் மிகப்பெரிய வணிக மையம் என்றால் அது மலையாள சினிமா இண்டஸ்ட்ரி தான். மலையாள சினிமா நல்ல கதைகள் மட்டுமில்லாமல், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கும் இடம் ஆகும். மேலும் கிரைம் த்ரில்லர்களை மையமாக கொண்டு நிறைய படங்கள் மலையாளத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன.

ஜோஜி: வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ என்னும் கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். பகத் பாசில் நடித்த இந்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அப்பா மற்றும் மூன்று மகன்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

சி யூ சூன்: 2019ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் சி யூ சூன். இந்த படத்தை பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இணைந்து தயாரித்திருந்தனர். தொழில்நுட்பங்களினால் நடக்கும் நன்மை மற்றும் தீமைகளை எடுத்து சொன்ன திரைப்படம் இது. இந்த படத்தில் பகத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

த்ரிஷ்யம்: மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் 2013ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் த்ரிஷ்யம். இந்த படம் கமலஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்னும் பெயரில் தமிழ் உருவாக்கம் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

Also Read: தொட்ட படமெல்லாம் சூப்பர் ஹிட் அடிக்க காரணம் இதுதான்.. வெற்றி ரகசியத்தை கூறிய பகத் பாசில்

அஞ்சாம் பாதிரா : அஞ்சாம் பாதிரா என்பதற்கு தமிழில் ‘பின்னிரவு’ என்று பொருள். நள்ளிரவில் நடக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் மர்மமான கொலையை கண்டுபிடிக்கும் கதை தான் இந்த திரைப்படம்.

நயாட்டு: மார்ட்டின் பிராக்கட் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் நயாட்டு. ஒரு காவல் நிலையத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

ஜோசப்: 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன த்ரில்லர் திரைப்படம் ஜோசப். ஓய்வு பெற்ற நான்கு காவல் அதிகாரிகளின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

Also Read: மதத்தை சுக்குநூறாக நொறுக்கிய பகத் பாசில்.. விக்ரமுக்கு சவால் விடும் நிலை மறந்தவன்

இரா: இரா 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மர்மம் நிறைந்த திரைப்படம் ஆகும். ஆர்யன் என்னும் சாமானிய மனிதன் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றத்தால் அவன் வாழ்க்கையில் நடக்கும் மாற்றம் தான் இந்த படத்தின் கதை.

வெட்டா: மஞ்சு வாரியார் மற்றும் இந்திரஜித் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் வெட்டா. காணாமல் போன நடிகையை கண்டுபிடிக்க இரண்டு போலீஸ்காரர்கள் தொடங்குவதிலிருந்து இந்த படம் ஆரம்பிக்கும். பல மர்மங்கள் நிறைந்த திரைப்படம் இது.

மெமரீஸ்: நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் மெமரீஸ். தொடர் கொலைகளை கண்டுபிடிக்க மதுவுக்கு அடிமையான காவலர் ப்ரித்விராஜை காவல்துறை நாடுவது தான் இந்த படத்தின் கதை.

12த் மேன்: ‘பெர்வெட்டி ஸ்கொனசூடி’ என்னும் இத்தாலிய படத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ஒரு விருந்தில் கூடும் 11 பேரில் ஒருவர் கொல்லப்படுகிறார். அந்த மரணத்தை பற்றி துப்பறியும் கதை தான் இது.

Also Read: நேரில் வந்து வச்சிக்கிறேன்.. விடாப்பிடியாய் பகத் பாசில் லோகேஷ்க்கு அனுப்பிய பரிசு

- Advertisement -spot_img

Trending News