திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மாஸ் என்ட்ரி கொடுக்கும் குணசேகரன்.. அனல் பறக்கும் எதிர்நீச்சல் டிஆர்பி

Ethir Neechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் இப்போது எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அரங்கேறி இருக்கிறது. அதாவது இந்த தொடரில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து திடீரென உயிரிழந்தது காரணமாக கதையில் பல ட்விஸ்ட்களை இயக்குனர் கொண்டு வந்திருக்கிறார்.

அதன்படி ஜீவானந்தத்தின் மகளை ஈஸ்வரி தனது வீட்டிற்கு அழைத்து வந்ததால் அங்கு பிரச்சனை வெடிக்கிறது. மற்றொருபுறம் ஞானம் மற்றும் கதிர் இருவரும் தனது அண்ணனை தேடி செல்கிறார்கள். அங்கு ஒரு சாமியார் குணசேகரனை பார்க்க வேண்டும் என்றால் என்னுடன் வாருங்கள் என்று அழைத்துச் செல்கிறார்.

Also Read : திடீரென்று சீரியலில் இருந்து விலகி, சைலண்டா திருமணத்தை முடித்த சன் டிவி நடிகை.. வைரலாகும் கல்யாண புகைப்படம்

அந்தச் சமயத்தில் கதிர் தனது அண்ணனின் நினைவுகளை நினைத்து ஞானத்திடம் சொல்லி அழுகிறார். எப்படியாவது குணசேகரனை வீட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தம்பிகள் தவியாய் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் காரில் இருந்து குணசேகரன் இறங்கி வருகிறார்.

அவரின் கால்கள் மட்டும் தெரிந்த நிலையில் நேற்று எபிசோட் முடிந்துவிட்டது. ஆகையால் இன்று ஒட்டுமொத்த எதிர்நீச்சல் ரசிகர்களும் ஆவலாக அடுத்த குணசேகரன் யார் என்பதை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த வாரம் எதிர்நீச்சல் டிஆர்பி அனல் பறக்க போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : இந்த வார டிஆர்பி-யில் மாஸ் காட்டும் டாப் 6 சீரியல்கள்.. மற்ற சேனல்களை திணறடிக்கும் எதிர்நீச்சல்

மேலும் அடுத்த ஆதி குணசேகரன் ஆக வருவதற்கு நடிகர் பசுபதி மற்றும் அழகர் பெருமாளுக்கு இருக்கஅதிக வாய்ப்பு இருக்கிறது. முதலில் வேல ராமமூர்த்தி இடம் சன் தொலைக்காட்சி பேசிய நிலையில் அவருக்கு கால்ஷீட் பிரச்சனை இருப்பதாக தெரிந்தது. நிறைய படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

ஆகையால் அடுத்தபடியாக குணசேகரன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்கள் தேர்வு நடக்கும் போது தான் பசுபதி, அழகர் பெருமாள் அடுத்தடுத்த இடங்களில் இருந்துள்ளனர். எனவே இவர்களில் ஒருவர் குணசேகரனாக என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய எபிசோடில் அடுத்த குணசேகரன் யார் என்ற பதில் கிடைத்துவிடும்.

Also Read : டிஆர்பி-க்காக ஆர்டிஸ்ட்களை பாடா படுத்தும் எதிர்நீச்சல்.. குணசேகரனின் தம்பி பொண்டாட்டிக்கு போடப்பட்ட ட்ரிப்ஸ்

Trending News