வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்தியன் 2 படத்திற்கு புதுசாக வந்த பிரச்சனை.. 5 விஷயங்களை மாற்ற சொல்லிய சென்சார் போர்டு

Indian 2: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக நடிக்கும் என்சைக்ளோபீடியாவாக இருக்கும் கமல் நடிப்பில் பிரம்மாண்டத்திற்கு பெயர் வாங்கிய சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் இந்தியன் 2. இப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. கிட்டத்தட்ட 28 வருடங்களுக்குப் பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கிறது.

அதிலும் ஐந்து வருடங்களுக்கு மேலாக பல பிரச்சினைகளை தாண்டி தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் காட்சிகள் அதிகமாக நீடித்து உள்ளதால் இந்தியன் 3 படத்திற்கும் கதைகள் தயாராகி விட்டது. அந்த வகையில் இரண்டாம் பாகத்தை விட 3 பாகத்தின் காட்சிகள் ரொம்பவே நன்றாக இருக்கும் என்று கமல் கூறி இருக்கிறார்.

இந்தியன் 2 படத்தில் ஏற்படும் மாற்றம்

ஏற்கனவே இந்தியன் படம் மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அந்த வகையில் லஞ்சம் ஊழலுக்கு எதிராக பல வருடங்களுக்குப் பின் மறுபடியும் இந்த கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்த சமயத்தில் புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது.

அது என்னவென்றால் இப்படத்தை தனிமை குழுவுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அங்கே சென்சார் போர்டில் ஒரு ஐந்து விஷயங்களை மாற்ற சொல்லி இருக்கிறார்கள். புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என வரும் வாசகம் தெளிவாக இல்லை. எச்சரிக்கை வாசகங்களை கருப்பு நிறத்தில் மிகவும் பெரியதாக வெள்ளை நிற பின்னணியில் தெளிவாக வைக்க வேண்டும். ஒரு காட்சியில் வரும் பிரைப் மார்க்கெட்(Bribe Market) என்கிற வார்த்தையை மாற்றவும். ஒரு காட்சியில் க்ளீவேஜ் தெரிவதை மாற்றவும்.

படத்தில் வரும் 9 கெட்ட வார்த்தைகளை நீக்கவும். பிற காப்பிரைட் கன்டன்ட்டை பயன்படுத்தியதற்கு தடையில்லா சான்று சமர்பிக்க வேண்டும் இல்லை என்றால் அந்த காட்சிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படம் 3 மணி நேரம் ஓடினாலும் மக்களுக்கு போரடிக்காத வகையில் கதைகள் விறுப்பாகவும் சுவாரஸ்யத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியன் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது ஏஆர் ரகுமான். ஆனால் தற்போது 2 மற்றும் 3 படத்திற்கு அனிருத் இசையமைத்திருப்பது எந்த அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகும் என்பதை சமீபத்தில் வெளிவந்த இரண்டு பாடங்கள் மூலம் புரிந்து விட்டது. வழக்கம் போல ராக்ஸ்டார் அனிருத் பட்டையை கிளப்பிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்சார் போர்டின் உத்தரவுப்படி தயாரிப்பாளர்களால் மாற்றங்கள் செய்யப்பட்டதை அடுத்து இந்தியன் 2 திரைப்படத்தை அனைத்து வயதினரும் பார்க்கக்கூடிய வகையில் U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியன் 2 படத்தின் அப்டேட்

Trending News