வியாழக்கிழமை, நவம்பர் 21, 2024

புதிய நம்பிக்கை நட்சத்திரம்.. டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த சாதனை படைத்த ஒரே இந்திய வீரர் இவருதான்!

இளம் வயதில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை இந்திய வீரர் படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி புனேவில் 24 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரையில் நடைபெற்றது.ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியை டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி வென்ற நிலையில், ரோஹித் சர்மா தலையிலான இந்தியா அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அது நடக்கவில்லை.

அதன்படி, டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல அவுட் ஆனது. அந்த அணியின் வீரர் கான்வே அதிரடியாக விளையாடி 76 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்களான வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெடும், அஸ்வின் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்டர்னர் சவாலாக இருந்தார். அதன்படி அவரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து சார்பில் மிட்செல் திறமையாக பந்து வீச்சி 7 விக்கெட் சாய்தார்.

இந்த நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் முன்னிலை பெற்று 2 வது இன்னிங்ஸை தொடங்கிய நிலையில் இதிலும் ரன்கள் சேர்ந்து 301 ரன்கள் முன்னிலையில் இருந்தது. எனவே 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்ஸில் 359 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்த இந்திய அணி 245 ரன்கள்தான் எடுத்தது. எனவே 113 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

இளம் வீரார் ஜெய்ஸ்வால் சாதனை

இந்தப் போட்டியில் பேட்டிங் செய்த இந்திய அணியின் இளம் வீரார் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் அடித்தபோது. இவ்வாண்டின் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 1006 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த சாதனையை இதுவரை எந்த இந்திய வீரரும் படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதாகும் முன்னர் ஒரு வீரர் ஒரே ஆண்டில் 100 ரன்கள் எடுப்பது அதிசய நிகழ்வு என்பதால் இந்திய வீரர் ஜெய்ஸ்வாலுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. எனவே சர்வதேச கிரிக்கெட்டில் இந்த சாதனையை நிகழ்த்திய 5 வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இளம் நம்பிக்கை நட்சத்திரம்

இதற்கு முன்னதாக கார்பீல்ட் சோபர்ஸ், கிரேம் சுமித், டி வில்லியர்ஸ், அலெஸ்டர் குக் ஆகியோர் இச்சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை தயார் படுத்துவதாக தகவல் வெளியான நிலையில் திறமையான வீரர்களில் ஒருவரான ஜெய்ஸ்வால் இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என தகவல் வெளியாகிறது.

- Advertisement -spot_img

Trending News