ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்த 5 மரணங்கள்.. 3 உயிர்களை காவு வாங்கிய இந்தியன் 2, இதுக்கு இல்லையா ஒரு முடிவு

Indian 2: இப்போதெல்லாம் சினிமாவில் ரிஸ்க்கான சண்டை காட்சிகள் வைப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால் ஹீரோக்கள் அதை செய்கிறார்களா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. ஒரு சிலர் மட்டுமே இதில் விதிவிலக்கு.

மற்றவர்கள் எல்லாம் டூப் போட்டுக் கொள்கிறார்கள். இதற்காக பயிற்சி பெற்ற சண்டை கலைஞர்கள் உள்ளனர். ஆனால் அதை எல்லாம் தாண்டி சில சமயங்கள் அது அசம்பாவிதத்தில் முடிந்து விடுகிறது.

அப்படி படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஐந்து மரண சம்பவங்கள் பற்றி இங்கு காண்போம். முதலாவதாக 1980 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த காளி படத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

இதுக்கு இல்லையா ஒரு முடிவு

அந்த படப்பிடிப்பு சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பல சண்டை கலைஞர்கள் மற்றும் குதிரைகள் பலியானது குறிப்பிடத்தக்கது. அதை அடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

பல பேர் காயமடைந்தனர். இது திரையுலகில் கடும் அதிர்வை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பாதுகாப்பை உறுதி செய்து சூட்டிங் நடத்தப்பட வேண்டும் என விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும் கூட 2022ல் விடுதலை படப்பிடிப்பில் மீண்டும் ஒரு துயர சம்பவம் நடந்தது. சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டபோது சுரேஷ் என்ற சண்டை கலைஞர் படுகாயம் அடைந்தார்.

மேலும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பலனின்றி அவர் உயிரிழந்தார். அதை அடுத்து கடந்த வருடம் சர்தார் 2 படப்பிடிப்பு ஆரம்பித்து மூன்றாவது நாளில் ஸ்டண்ட் மேன் ஏழுமலை 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் மரணமடைந்துள்ளார். பாதுகாப்புக்காக விழிப்புணர்வு, விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டும் கூட இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.

இதற்கு காரணம் ஆபத்தான சண்டை காட்சிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பது. அதிக முறை ரீடேக் எடுப்பது தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை கருத்தில் கொள்ளாதது போன்றவை தான்.

மேலும் உயரமான இடம், நெருப்பு போன்றவற்றில் சண்டை காட்சிகள் எடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இயக்குனர் காட்சி தான் நினைத்தது போல் வர வேண்டும் என்பதற்காக திரும்பத் திரும்ப படமாக்குவது கூட இந்த விபத்துக்கு காரணம் என்கின்றனர்.

இனிமேலாவது முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேபோல் ரிஸ்க்கான சண்டை காட்சிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் சில அசம்பாவிதங்களை தடுக்க முடியும்.