ஆட தெரியாமல் ஆடிய அரசியல் ஆட்டம், தலை நிமிர முடியாத அளவுக்கு விழும் அடி.. யோசிக்காமல் சிக்கிட்டாரே சூர்யா!

Suriya: உப்பு தின்றவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும், அப்படி ஒரு நிலைமை தான் சூர்யாவுக்கு. சூர்யாவின் படங்கள் தொடர் தோல்வி அடைகிறது என்பதை தாண்டி அவர் மீது தனிப்பட்ட வன்மம் காட்டப்படுகிறது.

இதை அவருடைய மனைவியே கங்குவார ரிலீஸ் சமயத்தில் மனம் திறந்து பேசி இருக்கிறார். சூர்யா மீது வன்மம் காட்டுவதற்கு அப்படி என்னதான் அவருக்கு பிரச்சனை என்று எல்லோருக்கும் தோன்றலாம்.

யோசிக்காமல் சிக்கிட்டாரே சூர்யா!

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் ஞாபகத்தில் இருப்பவர்களுக்கு சூர்யா ஏன் இப்போது படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

2018 ஆம் ஆண்டு சமயத்தில் நீட் தேர்வு உட்பட நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்தார் சூர்யா.

அந்த சமயத்தில் காப்பான் பட விழாவின் போது சீனியர் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் லேசாக காதை திருகியும் விட்டார்.

அதன் பின்னர் திமுக ஆட்சி வந்த பிறகு சூர்யா எந்த ஒரு அரசியல் கருத்தையும் முன் வைக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் மும்பைக்கு குடும்பத்தோடு கிளம்பிவிட்டார்.

அது போன்று தான் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் பற்றி கருத்து தெரிவித்ததும். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது போராளியாக தன்னை காட்டிக் கொண்டு, திமுக வந்த பின் வாயை மூடிக்கொண்டு இருப்பது எல்லாம் சினிமா லாபத்திற்காக தான்.

இதை முன் வைத்து தான் சூர்யாவுக்கு எதிராக பல கருத்துக்கள் தற்போது பேசப்பட்டு வருகிறது. ஆடத் தெரியாமல் ஆடிய அரசியல் ஆட்டத்தால் இப்போது சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.