Thug Life: கமல், மணிரத்னம் கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு இணைகிறதே என ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் இருந்தனர். அதற்கு ஏற்றார் போல் டிரைலர், பாடல்கள், பிரமோஷன் என சரவெடியாக இருந்தது.
ஆனால் படத்தை பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தான். கேங்ஸ்டர் படம் என்று சொல்லிட்டு என்ன இப்படி இருக்கு என்பது தான் அனைவரின் வெளிப்படையான மைண்ட் வாய்ஸ்.
இதை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல ஆண்டவரே. கதை நல்லா இல்ல கமலின் ரொமான்ஸ் புடிக்கல என அடுத்தடுத்து கமெண்டுகள் மட்டுமல்ல ட்ரோல் மீம்ஸ் கூட வைரல் ஆகி வருகிறது.
தக் லைஃப் எதிரொலி
இதை பார்த்துவிட்டு அடுத்தடுத்து வரப்போகும் கேங்ஸ்டர் படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் கூட பீதியில் தான் இருக்கின்றனர். அது மட்டும் இன்றி ப்ளூ சட்டை மாறன் இது குறித்து நக்கல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதாவது இனிமே கேங்ஸ்டர் படம் வராது. நிரந்தரமா தடை செய்யப்படும் என எந்த கட்சி உறுதி கொடுக்கிறதோ அவங்களுக்கு தான் 2026ல எங்க ஓட்டு என தமிழக மக்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்.
இப்படியாக ஒரு ட்வீட் அவர் போட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. உண்மையில் ஆடியன்ஸின் மனநிலையும் இதுதான். கேங்ஸ்டர் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான வன்முறையை யாரும் கேட்கவில்லை.
இப்போது காமெடிக்கு அதிக வறட்சியாக இருக்கிறது. அதனால் தான் மதகஜராஜா 12 வருடங்களுக்கு பின்பும் ஓடியது. அதேபோல் எதார்த்த குடும்ப கதையாக அமைந்த டூரிஸ்ட் ஃபேமிலி கல்லா கட்டியது.
இதனால் பெரிய பட்ஜெட், கேங்ஸ்டர் என்ற விளம்பரத்தை வைத்து யாரும் கலெக்ஷன் பார்க்க முடியாது என்பது தெரிகிறது. இனியாவது இயக்குனர்களும் ஹீரோக்களும் புது ரூட்டுக்கு மாறுவார்களா என பார்ப்போம்.