எப்போதும் கமலை வாரி விடும் பிரபலம்.. ஆண்டவர் பக்கம் நிற்கும் தயாரிப்பாளர்

Kamal : நாளை தக் லைஃப் படம் வெளியாக உள்ள நிலையில் ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இந்த படத்தின் மீது தான் இருக்கிறது. ஆனால் கமல் கன்னட மொழி தமிழில் இருந்து தான் உருவானது என்று சொன்னது கர்நாடகாவில் சர்ச்சையானது.

இதை தொடர்ந்து கமல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதை அடுத்து கமலுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த சூழலில் எப்போது நேரம் கிடைத்தாலும் கமலை பிரபலம் ஒருவர் வாரி விடுவார்.

ஆனால் இந்த முறை கமலுக்கு ஆதரவாக பேசி இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் பல சர்ச்சையான விஷயங்களை பேசக்கூடியவர். இவர் கமலை பற்றி நிறைய விமர்சனங்களை இதற்கு முன் வைத்தது உண்டு.

கமலுக்கு ஆதரவாக இருக்கும் பிரபல தயாரிப்பாளர்

இப்போது கர்நாடகா பிரச்சனையில் கமலுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார். அதாவது கமல் தன்னுடைய கூற்றில் எப்போதுமே நிற்க வேண்டும். எந்த காலத்திலும் மன்னிப்பு கேட்கக்கூடாது.

நியாயம் கமல் பக்கம் இருக்கிறது. அவர் மன்னிப்பு கேட்டால் தமிழகமே அவமானப்பட்டுவிடும். ஆகையால் கன்னடத்தில் வசூல் பாதித்தாலும் கமல் மன்னிப்பு கேட்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

அந்த வசூலை தமிழகம் பெற்று கொடுத்து விடும். கர்நாடகாவில் உள்ள தமிழர்களும் இங்கு வந்து படத்தை பார்ப்பார்கள். இதனால் தக் லைஃப் படத்திற்கு இரண்டு மடங்கான வசூல் கிடைக்கும். ஆகையால் தமிழ் மூலமாகத்தான் கன்னடம் வந்தது என்பதை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற ராஜன் கூறியிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →