சந்தேகப்பட்ட ரஜினி, வளைத்து போட்ட சிம்பு.. விட்டதை பிடிக்க ஆட்டத்திற்குள் வந்த ஆண்டவர்

Rajinikanth – Kamal – Simbu: நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அவருடைய 170 வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 171 வது படத்தில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். சமீப காலமாக ரஜினி நிறைய இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறார் பிரபல இளம் இயக்குனர்.

அண்ணாத்தே படத்திற்குப் பிறகு ரஜினி அடுத்து யாருடன் இணைவார் என மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ரஜினியும் அந்த சமயத்தில் ஹிட் படங்களை கொடுத்த இளம் இயக்குனர்களை நேரில் அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வரிசையில் நெல்சன், சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இருந்தனர்.

இதில் தேசிங்கு பெரியசாமி சூப்பர் ஸ்டாரின் மிகப்பெரிய ரசிகர் என்பதால் அவருக்கு தான் வாய்ப்பு என தகவல்கள் வெளியானது. ஆனால் ரஜினி நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்து ஜெயிலர் படத்தில் நடித்தார். உண்மையில் தேசிங்கு பெரியசாமி, ஒரு நல்ல கதையுடன், ரஜினியை அணுகி இருக்கிறார். இப்படி ஒரு கதையையும், அதிக பட்ஜெட்டையும், தேசிங்கால் சமாளிக்க முடியாது என யோசித்த ரஜினி நாம் இன்னொரு தடவை இணைந்து படம் பண்ணலாம் என சொல்லிவிட்டாராம்.

பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த கதையை சிம்புவிடம் சொல்லி இருக்கிறார் தேசிங்கு. சிம்புவுக்கு கதை ரொம்பவே பிடித்து போக, ஐசரி கணேசிடம் பேசி இருக்கிறார். ஆனால் அவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை தாணு எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என ஐசரி கணேஷ் சொல்லி விட்டாராம். தேசிங்கு பெரியசாமி, கலைப்புலி தாணுவிடமும் கதையை சொல்லி வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

தாணு இந்த படத்தை எடுக்க தயாராக இருப்பதாகவும் ஆனால் அதில் கமல் நடிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார். தேசிங்கு பெரியசாமி கமலஹாசனிடம் இந்த கதையை சொல்லி இருக்கிறார். ஆனால் கமல், அடுத்தடுத்து எச் வினோத் மற்றும் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருப்பதால் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என சொல்லி இருக்கிறார்.

இருந்தாலும் கமலுக்கு இப்படி ஒரு நல்ல கதையை விட விருப்பம் இல்லையாம். அதனால் இந்த கதையை என்னுடைய சொந்த தயாரிப்பில் பண்ணலாம் என்று கமல் ஓகே சொல்லி இருக்கிறார். இறுதியாக கமல் மற்றும் தேசிங்கு பெரியசாமி பேச்சு வார்த்தை நடத்தி சிம்புவை அந்த கதையில் நடிக்க வைக்க சம்மதம் வாங்கி இருக்கிறார்கள். அந்த கதை தான் தற்போது STR 48 என்னும் பெயரில் உருவாக இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →