சமீபத்தில் OTT நிறுவனங்கள் அனைத்தும் பெரிய இன்னல்களை சந்தித்து வருகிறது. ஒரு படத்தை வாங்குவதற்காக பெரும் தொகைகளை ஒதுக்குகிறார்கள். ஆனால் அந்த படம் அவர்களுக்கு லாபத்தை கொடுக்கிறதா என்பது கேள்விக்குறி தான். அதனால் பெரிய விலை கொடுத்து வாங்குவதற்கு யோசிக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க தியேட்டர் உரிமையாளர்களும், திரையிடப்பட்ட படத்தை நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியிடுவதை எதிர்த்து பிரச்சனை செய்து வருகிறார்கள். எந்த ஒரு படமாக இருந்தாலும் நல்ல விமர்சனத்தை பெற்றால் மட்டுமே தியேட்டர்களில் கூட்டம் வருகிறது.
முதல் ஷோ முடிந்த உடனையே அந்த படத்தை பற்றிய விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். youtube சேனல்கள் மூலம் இது சமூக வலைதளத்தில் காட்டு தீ போல் பரவுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் படம் சுமார் என்று விமர்சனம் வந்தால், நான்கு வாரங்கள் கழித்து ஓ டி டியில் பார்த்துக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இதனால் தியேட்டரில் ரிலீஸ் ஆன படம் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இப்படி குறைந்த நாட்களில் ஒடிடி பிளாட் ஃபார்மில் வருவதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பிரச்சனை தான். அவர்களும் பல கஷ்டங்களை தாண்டி இந்த பிரச்சினைக்கு தீர்வு தேடி வருகிறார்கள்.
பாலிவுட் படங்களை எடுத்துக் கொண்டால் 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடி பிளாட்ஃபார்ம்களில் ரிலீசாகும். இப்பொழுது கமல் நடித்துக் கொண்டிருக்கும் தக்லைப் படத்தை 125 கோடிகள் கொடுத்து Netflix வாங்கி உள்ளது. இந்த படம் 8 வாரங்கள் கழித்து தான் ஒடிடியில் வெளிவருமாம். இது கமல் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு வந்த புது நடைமுறை.