Kamal: கமல் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகன் படத்திற்கு பிறகு இப்போது தான் மணிரத்னத்துடன் கமல் இணையும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் சிம்பு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த சூழலில் தக் லைஃப் படம் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கான ப்ரொமோஷன் வேலைகள் தற்போது பயங்கரமாக நடக்கிறது. இதற்காக கமல் கேரளா சென்றிருந்தார். அப்போது அவர் பேசியிருப்பது தான் சர்ச்சையாகி இருக்கிறது.
அதாவது ஹிந்தியை பிறகு கற்றுக் கொள்ளலாம் முதலில் நாம் பக்கத்து மாநிலத்தில் உள்ள மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய மொழி அழிந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை தான்.
ஹிந்தியை பற்றிய கமலின் சர்ச்சை பேச்சு
அனைவரும் திராவிடர்கள் என்பதை மறந்து விடாதீர்கள் என்று கமல் பேசியிருக்கிறார். இதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது ஹிந்தி திணிப்புக்கு எதிராக பலர் போராட்டங்கள் செய்து வருகின்றனர்.
அதுவும் குறிப்பாக திராவிட கழகம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக இருக்கிறது. அதோடு தக் லைஃப் படத்தை மணிரத்தினம், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தான் தயாரித்துள்ளது.
இந்த சூழலில் ஹிந்தி திணிப்பை பற்றி கமல் பேசியது தான் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் அமைந்திருக்கிறது. இதனால் தக் லைஃப் படத்திற்கு எதிர்வலைகள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.