மஞ்சுமல் பாய்ஸ்ஸ விடுங்க குணா படமே ஹாலிவுட் காப்பி தான்..! கமலை வறுத்தெடுக்கும் பிரபலம்

Kamal’s Guna is a Hollywood copy criticized by cinema person: “உன்னை நான் அறிவேன்.. என்னை அன்றி யார் அறிவார்” என்று தாயுள்ளதோடு தமிழ் சினிமாவை தத்தெடுத்த உலகநாயகன் கமலஹாசன் சோதனை முயற்சிகளின் மூலம் தமிழ் சினிமாவை தரம் உயர்த்த பல சோதனைகளைக் கடந்து வந்துள்ளார். 

உதாரணமாக அன்பே சிவம் படத்தில் சுனாமி பற்றி பேசியதாக இருக்கட்டும், தசாவதாரம் படத்தில் வைரஸ் கிருமிகளை பற்றிய முன்னெச்சரிக்கை செய்தியை கூறியதாக இருக்கட்டும் தீர்க்கதரிசியாகவே செயல்பட்டு வந்திருப்பார். 

அவரது படங்கள் மூலமாக மக்களுக்கு முற்போக்கு சிந்தனைகளை விதைக்க முற்படும் அவரின் எண்ணங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ரசிகர்களாகிய நாம் அவரது படங்களை அந்தந்த காலகட்டங்களில் கொண்டாட தவற விட்டு காலம் சென்ற பின்பு அவரது தொழில்நுட்பத்தையும் சிறந்த திரைகதைகளையும் கண்டு தமிழனாக பெருமைப்பட்டுக் கொள்கிறோம். 

இன்று மலையாளத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சக்கைபோடு போடும் மஞ்சுமல் பாய்ஸ் படத்தை பார்க்கும் போது குணா படம் இல்லை என்றால் இந்த மஞ்சுமல் பாய்ஸ் சாத்தியம் இல்லை என்று சவால்  விடுகிறோம். இதைக் கண்டு பொறாமையில் பொங்கிய பிரபலம் ஒருவர் குணா படமே ஹாலிவுட் காப்பி என்று கொளுத்தி போடுகிறார். 

ஹாலிவுட்டில் Sweet Hostage என்ற படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நாயகன் நாயகியை கடத்தி இதே போல் லவ் டார்ச்சர் செய்வதும், நாயகனின் திறமையையும் காதலையும் கண்டு இறுதியில்  நாயகியும் காதல் வசப்படுவது போன்ற கதையைத்தான் குணாவிலும் எடுத்து உள்ளார் கமல் என சினிமா ஆர்வலர் சத்தியேந்திரா கூறியுள்ளார். 

இப்போது வெளிவந்திருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் படமும் குணா குகையை மட்டுமே மையமாக வைத்து தமிழில் வெளிவந்த நயன்தாராவின் அறம் படம் போல் இருக்கிறது என்று கூறி வருகின்றனர். கலைக்கும் அழிவில்லை! சிறந்த கதைக்கும் அழிவில்லை! என்பது போல் மாறி மாறி மக்கள் மனதை ஆக்கிரமித்து வரும் சிறந்த கதைகளை, அந்த கதைகளை படமாக்க மெனக்கெடும் நடிகர்களின் கடின உழைப்பை காப்பி என்று ஒற்றை வார்த்தையில் விமர்சித்து அதற்கு இறுதி அஞ்சலி செய்வது என்ன காரணத்தினாலோ? காலத்திற்கு ஏற்ப வரும் சிறந்த கதைகளை கொண்டாடி சினிமாவை வாழ வைப்போம் வாருங்கள்.