சிவகார்த்திகேயன் பராசக்தி, மதராசி என பெரிய ப்ராஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் இலங்கையில் கொழும்பு பகுதியில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் மதராசி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் சுதா கொங்காரவின் பராசக்தி பட ஷூட்டிங்கிலும் பிசியாக இருக்கிறார்.
பராசக்தி படம் கமிட் ஆவதற்கு முன்பு சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள படத்தை ஒரு வருடம் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என வெங்கட் பிரபு தலையில் இடியை இறக்கி விட்டார் எஸ்.கே. அதனால் இந்த கூட்டணி அப்படியே அமுங்கி போய்விட்டது;.
சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் பராசக்தி படம் 2026 பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது அதற்கும் சிக்கல் வந்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அமலாக்கதுறை கண்காணிப்பின் கீழ் இருக்கிறது. இதனால் டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பிரச்சனை எழுந்துள்ளது.
ஒருவேளை இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் அடுத்த பொங்கலுக்கு நம் படம் ஏதாவது வெளிவர வேண்டும் என சிவகார்த்திகேயன் திட்டவட்டமாய் இருக்கிறார். இப்பொழுது வெங்கட் பிரபுவிற்கு, படத்தை உடனே ஆரம்பிக்கலாம் என அவசர அழைப்பு கொடுத்துள்ளார் எஸ் கே. இப்படி சிவகார்த்திகேயனை கர்மா சுற்றி அடிக்கிறது
துவண்டு போய் இருந்த வெங்கட் பிரபுவிற்கு அமலாக்கத்துறையால் மீண்டும் நல்ல வாய்ப்பு வந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் உருவாகப் போகும் படத்தை விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறார்கள். ஒவ்வொரு பெரிய பண்டிகைக்கும் நம் படம் வெளிவர வேண்டுமென ஆசை பிடித்து திரிகிறார் சிவகார்த்திகேயன்.