தயாரிப்பாளரை கதறவிடும் கார்த்தி.. துண்டு போட்ட அமேசானுக்கு கோவிந்தா போடும் சர்தார்

கார்த்தி சர்தார் 2 படப்பிடிப்பில் கடும் பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். ஏஜென்ட் சந்திரபோஸ் ஆக இரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பல மாதங்களாக இழுத்தடித்து வரும் படம் ஒன்று இன்னும் ரிலீசாகாமல் நிலுவையில் நிற்கிறது

கார்த்தி நடிப்பில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கி வந்த படம் வா வாத்தியாரே. இதை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் கிட்டத்தட்ட160 நாட்கள் சூட்டிங் நடைபெற்று முடிந்தது.

கார்த்தி நடிப்பில் அதிக நாட்கள் எடுக்கப்பட்ட படம் இது. இதற்கு முன்னர் காஸ்மாரோ படம் தான் 138 நாட்கள் எடுக்கப்பட்டதாம். அந்த படம் சரியாக போகவில்லை. இப்பொழுது இந்த படத்திற்கு இன்னும் 20 நாட்கள் கார்த்தியின் கால் சீட் இருந்தால்தான் முடிக்க முடியும் என்கிறாராம் இயக்குனர் நலன் குமாரசாமி .

எடுத்தவரை படத்தை பார்த்த கார்த்தி நன்றாக வந்திருக்கிறது ஆனால் நான் இப்பொழுது சர்தார் 2 படத்திற்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன் அதனால் 20 நாட்கள் கால் சீட் கொடுப்பது கஷ்டம். படம் முடிந்த பிறகு தான் இந்த படத்தில் நடிக்க முடியும் என கூறி வருகிறாராம்.

ஒரு பக்கம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இதற்கு நிறைய காசு செலவழித்து விட்டேன் இனிமேல் என்னிடம் காசு இல்லை எனக் கூறி வருகிறாராம். மறுபக்கம் அமேசான் இந்த படத்தை வாங்கி விட்டதாம் எப்போது ரிலீஸ் ஆகும் என அவர்களும் டார்ச்சர் கொடுத்து வருகிறார்களாம். சர்தார் மனசு வைத்தால் தான் நல்ல செய்தி வரும்.