புது அவதாரம் எடுக்கும் கார்த்தி.. அண்ணனுக்கு கொடுக்கப் போகும் வாய்ப்பு

Karthi : சினிமா உலகத்தில் ஒரு குடும்பமே சாதித்துக் கொண்டிருந்த தருணங்களில், சிவகுமார் குடும்பத்தினர் மட்டும் தப்ப முடியாது. நடிகர் சிவகுமார் நடிப்பின் நயத்துடன் தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தவர். அவருடைய மகன் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர்கள் இருவரும் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டி விட்ட நிலையில், ரசிகர்களிடையே ஒரே ஒரு கேள்வி தம்பி எங்கே என்பதுதான்.

இந்தக் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பருத்திவீரன் திரைப்படத்தில் ஹிட் கொடுத்தார் கார்த்தி. இந்த திரைப்படம் கிராமப்புற கதை என்றாலும் மக்களிடத்தில் பெரிய வரவேற்பு கிடைத்தது. கார்த்தி மற்றும் பிரியாமணியின் காம்போ வேற லெவலில் மக்கள் மனதில் பதிந்தது. தனது முதல் படத்திலேயே வெற்றி நாயகனாக அறிமுகமானார் கார்த்தி. பல பரிசுகளையும் தட்டிச் சென்றார்.

அதன்பின் சில வருடங்களுக்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் களமிறங்கினார். அந்தத் திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றியை கண்டார் கார்த்தி. சிவக்குமார், சூர்யா தான் நல்ல நடிகர்கள் என்று பார்த்தால் தம்பி அதுக்கு மேல இருப்பான் போல!

அதைத்தொடர்ந்து தான் பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ் காஷ்மோரா, சுல்தான்,தோழா விருமன் இப்படி பல படங்களில் நடித்து தன் இமேஜை மேலும் உயர்த்திக் கொண்டார் கார்த்தி. சூர்யாவிற்கு எப்படி தமிழ் சினிமா உலகம் வரவேற்பு கொடுத்ததோ, அதைவிட அதிகமாக தற்போது கார்த்திக்கு மவுஸ் கூடிவிட்டது.

இப்போது காதல் படங்களை தவிர்த்து விட்டு, மனிதநேயம், சமூக நியதி கொண்ட கதைகளையே தேர்வு செய்கிறாராம் கார்த்தி. தன் அண்ணன் சூர்யாவுடன் போட்டி போடாமல் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி தற்போது சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

புது அவதாரம்..

தற்போது சினிமாவில் கார்த்தி இயக்குனராக முயற்சிக்கிறார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் உலா வந்தது.

அதற்கு பதில் கூறியிருக்கிறார் கார்த்தி “நல்ல கதை இருந்தால் நிச்சயம் படத்தை இயக்குவேன். முதலில் கதையை தான் பார்ப்பேன். கும்பலாங்கி நைட்ஸ் திரைப்படம் போல் கதை அமைந்தால் நிச்சயம் படம் எடுப்பேன் – நடிகர் கார்த்தி“. இப்படி இவர் பேசியது வலைத்தளத்தில் வெகுவாக பரவுகிறது. இது மட்டுமில்லாமல் இவர் இயக்கத்தில் தனது அண்ணன் சூர்யாவை வைத்த படம் எடுக்க போவதாகவும் தகவல் பரவி வருகிறது.