மணிரத்தினத்திற்கு டாடா காண்பித்த செல்ல பிள்ளைகள்.. தலை தெரிக்க ஓடிய 3 ஹீரோக்கள்

இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் எப்போதுமே அழகாக காண்பித்து இருப்பார். பிரம்மாண்டமாக கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்திருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

எல்லோரையுமே அரசராக கண்முன் காட்டி இருந்தார் மணிரத்தினம். மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வெளியாகி இருந்தது. இப்படமும் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் மணிரத்தினத்தின் செல்லப் பிள்ளைகளான பொன்னியின் செல்வன் ஹீரோக்கள் அவருக்கு டாட்டா காண்பித்து சென்றுள்ளனர்.

Also Read : வசூல் சாதனையில் முதல் 5 இடத்தை பிடித்த படங்கள்.. பல வருட ரெக்கார்டை முறியடித்த மணிரத்தினம்

பொதுவாக ஒரு ஹீரோக்கள் ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்தில் நடிக்கும் போது இடைவெளி எடுப்பார்கள். அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் சிறிது ஓய்வு வேண்டும். இதற்காக சுற்றுலா செல்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். அதுவும் பொன்னியின் செல்வன் ஹீரோக்கள் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

எளிதில் அதிலிருந்து வெளிவருவது சாதாரண விஷயமல்ல. மேலும் மணிரத்தினத்திடமிருந்து விடிவு காலம் கிடைத்ததால் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி ஆகிய மூன்று பேரும் தலை தெரிக்க ஓடி உள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரம் தனது மகன் துருவ் விக்ரம் மற்றும் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலாவாக லண்டன் சென்றுள்ளார்.

Also Read : மாஸ் ஹீரோக்களை வைத்து மணிரத்தினம் வெற்றி கண்ட 5 படங்கள்.. இன்று வரை பெயர் சொல்லும் தளபதி

அடுத்ததாக கதையின் நாயகன் அருள்மொழி வர்மனாக நடித்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். அதாவது இப்போது விடுமுறை நாட்கள் என்பதால் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக ஜெயம் ரவி அங்கு சென்று இருக்கிறார்.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தயத்தேவனாக இளம்பெண்களை கவர்ந்த கார்த்தி தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார். இவ்வாறு பொன்னியின் செல்வன் ஹீரோக்கள் தங்களது குடும்பத்துடன் வெளிநாடு பறந்துள்ளனர்.

Also Read : ஒரு வழியா அடுத்த இயக்குனரை லாக் செய்த உலக நாயகன்.. மணிரத்தினத்திற்கு கொடுத்த அல்வா