சுட்டுப் போட்டாலும் எம்ஜிஆருக்கு நடிப்பு வராது.. பலபேர் முன்னிலையில் உண்மையை பேசிய இயக்குனர்

இன்றைக்கும் தமிழ் சினிமாவின் நடிகர்களாக வலம் வரவேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்களுக்கு முதலில் ஊக்கமாக இருப்பது எம்ஜிஆர் தான் இவருடைய நடிப்பு முகபாவனைகள் இவர் அணிந்த உடைகள் கண்ணாடிகள் இவர் நடித்த திரைப்படங்கள் என அனைத்து அனைத்திலும் மக்களை ஈர்த்தவர். அப்படிப்பட்ட நடிகர் எம்ஜிஆருக்கு நடிக்கவே தெரியாது என இயக்குனரும் தயாரிப்பாளருமான வி எஸ் குகநாதன் கூறியுள்ளார்.

புரட்சித்தலைவர் பொன்மனச் செல்வன், இதயக்கனி என மக்களின் இதயங்களில் இன்றளவும் தன்னுடைய நடிப்பாலும் தான் அரசியலில் ஆற்றிய பணியின் சாதனைகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜி ராமச்சந்திரன்.

தற்போது இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் கதையாசிரியர் ஆகவும் புகழ்பெற்ற வி.எஸ் குகநாதனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் எம்ஜிஆர் தான். தான் நடிப்பில்1968ஆம் ஆண்டு இயக்குனர் சாணக்கியா இயக்கத்தில் வெளியான புதிய மனிதன் திரைப்படத்தில் வி.எஸ் குகநாதனின் எழுதும் திறமையை கண்டு எம்ஜிஆர் இந்த திரைப்படத்திற்கு வசனங்களை எழுத வைத்து அறிமுகப்படுத்தினார்.

அத்திரைப்படத்தின் வெற்றியை அடுத்து சிவாஜி கணேசன் முத்துக்குமார் உள்ளிட்டோர் திரைப்படங்களில் வி எஸ் குகநாதன் வசனங்களை எழுத ஆரம்பித்தார். அதன் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தனிக்காட்டு ராஜா உள்ளிட்டோரின் திரைப்படங்களை இயக்கினார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல திரைப்படங்களுக்கு வசனமும் எழுதி இயக்கியும் உள்ளார்.

தற்போது ஒரு பேட்டி ஒன்றில் எம்ஜிஆரை பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஒருமுறை சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சிறப்பு விருந்தினர்களாக எம்ஜிஆரை, அக்கல்லூரி நிர்வாகம் அழைத்திருந்தது. அங்கு வந்த எம்ஜிஆரை வரவேற்றனர். அப்போது வி எஸ் குகநாதன் மேடையில் ஏறி நடிக்கத் தெரியாத ஒருவருக்கு எதற்கு வரவேற்பு என தைரியமாக எம்ஜிஆர் முன்னாடியே பேசியுள்ளார்.

இதனைக்கேட்ட எம்ஜிஆரின் முகம் கோபத்தில் சிவந்தது. மீண்டும் மீண்டும் அவரை பார்த்து நடிக்க தெரியாது எனக் கூறினேன். கோபமான எம்ஜிஆர் கிறுக்குத்தனமான ரியாக்சன் கொடுத்தார் என தெரிவித்தார். நடிக்க தெரியாதவர் என்று சொன்னவுடன் அங்குள்ள எல்லோரும் கைதட்டினர். மீண்டும் அதனை ஒரு முறை கூறியதாகவும் மற்றொரு முறையும் ரசிகர்கள் கை தட்டியதாக தெரிவித்தார். பின்னர் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் எம்ஜிஆருக்கு நிஜவாழ்க்கையில் நடிக்கத் தெரியாது என்று சொன்னவுடன் தான் எம்ஜிஆரின் முகம் மாறியதாம். இதை அவர் சொன்னவுடன் அப்போது அரங்கமே அதிர்ந்ததாக தெரிவித்துள்ளார். எம்ஜிஆருக்கு நிஜமாகவே நிஜவாழ்க்கையில் நடிக்கத் தெரியாத மனிதர் என்று அந்த பேட்டியில் விசி குகநாதன் தெரிவித்துள்ளார்.