Simbu : தனது குழந்தை பருவத்தில் தனது நடிப்பின் மூலம் லிட்டில் ஸ்டார் என்று பட்டம் பெற்று இந்த STR என இளம் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் சிலம்பரசன் என்ற சிம்பு. விஜய் ரசிகர், அஜித் ரசிகர் என சுற்றி கொண்டு இருக்கும் கூட்டத்தை போல் சிம்புவுக்கும் தனியாக ஒரு கூட்டமே இருக்கிறது.
2002இல் தமிழ் சினிமா உலகில் காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார். பின்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து பயங்கரமான ஹிட் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கோவில், வல்லவன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார்.
STR சிம்புக்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டமே அலைமோதியது. இதன் பின் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த சிம்புவை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்.
ஒல்லியான தோற்றத்தில் இருந்த சிம்பு திடீரென சற்று உடல் எடை கூடியதால் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் இது பேசும் பொருளாக மாறியது. மீண்டும் தனது பழைய தோற்றத்தை கொண்டு வந்தார்.
ஒரே உடல் இரண்டு வேஷம்..
Thuglife : இந்த திரைப்படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷாவை வைத்து பல மீம்ஸ்கள் வைரலாகியது. இந்த படத்தில் ஏன்டா நடிச்சோம் என்று சிம்புவுக்கு தோன்றும் அளவிற்கு வைரல் மீம்ஸ் இருந்தது. அதை சிறிதளவும் பொருட்படுத்தாத இவர், தொடர்ந்து இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் #STR 49 என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. எடிட்டிங், டூப், மற்றும் நீண்ட நாள் உடற்பயிற்சி இல்லாமல் சிம்பு இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த செய்தி ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பை கொடுத்துள்ளது.