கிங்காங் மகள் திருமண புகைப்படங்கள்.. இன்வைட் பண்ணியும் வராத பிரபலங்கள்

King kong : சினிமாவில் தனது உடல் அமைப்பை பற்றி கவலைப்படாமல், தொடர்ந்த பல காமெடிகளில் நடித்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்த காமெடி நடிகர் கிங்காங்.

நடிகர் பிரசாந்த் நடிப்பில் 2003இல் வெளியான வின்னர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு நடன சீனில் மிகவும் பிரபலமடைந்தார் கிங்காங். பல காமெடி சீன்களில் தான் திறமையானவன் என்று நிரூபித்த கிங்காங் “லிட்டில் ஸ்டார்” என்று அழைக்கப்பட்டார். இவருடைய டான்ஸ் வீடியோக்கள் youtube இல் பயங்கரமாக வைரலாகியது.

சங்கர் ஏழுமலை என்ற தனது நிஜப் பெயரை சினிமாவிற்காக கிங்காங் என்று மாற்றிக் கொண்டார். சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்ததற்கு பிறகு, கலா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு கீர்த்தனா, சக்தி பிரியா, துரைமுருகன் என மூன்று பிள்ளைகள் இருக்கிறனர்.

இவரது உயரம் 0.95 மி.மீ. தனது உயரத்தை பொருட்படுத்தாமல் சினிமாவில் உறுதியாக நின்று 2006 வரைக்கும் தொடர் ஹிட் காமெடிகளை கொடுத்தார். பின்னர் 2007 இல் பொருளாதார சூழ்நிலையில் சிக்கித் தவித்த கிங் காங், சில வருடங்களிலேயே மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

நடந்து முடிந்த மகளின் திருமணம்..

உருவம் தான் சிறியது ஆனால் இவரின் சாதனை மிகப் பெரியது. தன் உருவத்தை கேலி செய்பவர்களுக்கு தனது வெற்றியின் மூலமே பதிலடி கொடுப்பாராம். இதுவரை எந்த வலைத்தளத்திலும் இப்போது வரைக்கும் இவரை பற்றி நெகட்டிவான விமர்சனங்கள் வந்ததே இல்லை.

தற்போது தனது மகள் திருமணத்தை அட்டகாசமாக இன்று நடத்தி முடித்துள்ளார். திருமணத்திற்கு சென்ற அனைவருமே இவரைப் பாராட்டி இருக்கின்றனர். இது மட்டுமில்லாமல் இவரது மகள் திருமண புகைப்படம் மீடியாவில் விறுவிறுப்பாக வைரலாகி வருகிறது.

இன்வைட் பண்ணியும் வராத பிரபலங்கள்..

மகள் திருமணத்திற்கு சிவகார்த்திகேயனை சென்ற மாதம் அழைத்ததாகவும், ஆனால் அவர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி பரவுகிறது. மேலும் தேவயானி, விஷால், கார்த்திக் போன்றவர்களை அழைத்துள்ளார். ஆனால் எந்த திருமண புகைப்படங்களிலும் இவர்கள் தென்படவில்லை.