சர்ச்சைக்குரிய படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்த ரகுல் ப்ரீத் சிங்.. உலக எய்ட்ஸ் தினத்தை குறிவைத்த பட குழு

தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் க்யூட்டான நடிகை என பெயர் வாங்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது கமலஹாசன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் அயலான் திரைப்படம் படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையிலும் திரைக்கு வர தாமதமாகும் என்ற நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்பொழுது இவர் பிரபல இயக்குனர் தேஜஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கும் சத்திரிவாலி என்று சர்ச்சைக்குரிய படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய முடிவுக்கு படக் குழு வந்திருக்கிறது.

இதில் நிறுவனத்தில் பரிசோதகர் வேலைக்கு சேரும் ராகுல் ப்ரீத் சிங் ஆரம்பத்தில் கூச்சப்பட்டு தயங்கியபடி இருக்கும் நிலையில் பின்பு அதன் அவசியம் மற்றும் தேவையை புரிந்து கொண்டு எப்படி மக்களுக்கு சர்ச்சைக்குரிய விழிப்புணர்வு கொடுக்கிறார் என்பதை காமெடியாக சொல்லியிருக்கும் படம்தான் சத்திரிவாலி.

ஆகையால் இந்த படத்தை உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு ஜனவரி மாதம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிட போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த விழிப்புணர்வின் மூலம் அதன் அவசியத்தை தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

பலரும் பகிரங்கமாக பேச தயங்கி விஷயத்தை நடிகை ரகுல் பிரீத் சிங் இந்தப் படத்தில் சமூக அக்கறையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே துணிச்சலுடன் சத்திரிவாலி படத்தில் நடித்திருப்பதை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.