STR48 – 49 – 51 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இயக்குனர்களை தேர்வு செய்து வைத்துள்ளார் சிம்பு. தன்னுடைய 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார்.
STR 49 படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்ய போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது. அடுத்த படமான 50ஐ சிம்புவே இயக்குவதாகவும் ஓர் ஐடியா வைத்திருந்தார்.STR 51 படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்கப் போகிறார். இதற்கு “God of Love” என்றும் பெயர் வைத்திருந்தனர்.
முதல் கட்டமாக STR 48 படம் ஆரம்பிப்பதாக இருந்தது. இந்த படத்திற்கு ஆச்சரியமூட்டும் வகையில் சந்தானம் மீண்டும் காமெடி ரோல் பண்ணுவதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அதற்குள் யார் கண்ணு பட்டது என்பது தெரியவில்லை. இப்பொழுது இந்த படத்திற்கு பிரச்சனை எழுந்துள்ளது.
சுமார் 13 வருடங்கள் கழித்து விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்த மதகஜராஜா படம் வெளியானது. சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் சந்தானத்தின் காமெடியை மக்கள் ஆரவாரத்தோடு ரசித்தனர். படமும் நல்ல வசூலை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.
இதனால் தனது எண்ணத்தை மாற்றி மீண்டும் காமெடி ரோலில் சிம்புவுடன் நடிக்க முன் வந்தார் சந்தானம். சிம்பு தான் சந்தானத்தை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். இப்பொழுது இந்த கூட்டணிக்கு ஆப்பு அடிக்கும் விதமாக இதை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கிக்கொண்டது.
இதனால் இந்த படம் டிராப் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிம்புவும் தனது அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது STR48 படம். சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தையும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறார்கள். அதுவும் சிக்கலில் தான் இருக்கிறது.