Simbu : சினிமாவில் சிம்புக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே குவிந்துள்ளது. இவரின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம், தாறுமாறாக இருக்கும். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சிம்பு கிளப்பிய சர்ச்சை தற்போது வெடித்து கொண்டிருக்கிறது.
தற்போது சிம்பு மற்றும் வெற்றிமாறன் படம் குறித்த சினிமாவில் ஒரு பரவலாக பேச்சு எழுந்துள்ளது. சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு சம்பளத்தை சிம்பு உயர்த்தி கேட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிம்பு நடிக்கும் இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்க இருந்தார். படத்தை எடுக்க லொகேஷன் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். தற்போது ஓடிடி கொடுத்த ஆயிரம் கோடி காரணமாக தற்போது நடிகர்களும் தங்களது சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர்.
கலைப்புலி எஸ் தானு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு முதலில் 10 கோடி அட்வான்ஸ் கேட்டிருக்கிறார். அதன் பின் இல்லை வேண்டாம் 30 கோடி கொடுங்கள் அதன்பின் சம்பளத்தை பற்றி பேசலாம் என கூறினாராம்.
சிம்பு இப்படி கேட்ட அதனால் தானு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாராம். இயக்குனர் மற்றும் ஹீரோக்கள் சம்பளத்தை படம் எல்லாம் கணக்கு போட்டு பார்த்தால் படம் தயாரிப்பதற்கு 125 கோடி தேவைப்படுகிறது. இதனால் மிகவும் மன குழப்பத்தில் இருக்கிறார் கலைப்புலி எஸ் தானு.
சம்பளத்தை அள்ளிக் கொடுக்கும் கலைப்புலி எஸ் தானுவே சிம்புவை வைத்து படம் இயக்குவதற்கு தயங்குகிறார். ஏற்கனவே சிம்புவின் பல படங்கள் கைவிடப்பட்டது இதனால் தற்போது சிம்பு ஒரு முடிவெடுத்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் உடன் இந்த படத்தை எடுத்து முடிப்பதாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.