சிவாஜியின் தோற்றத்தைப் பார்த்து எல்லோரும் அவரை டெரர் என்று கூறுவார்கள். ஆனால் அவருக்குள் இருக்கும் ஹுமர் சென்சை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மட்டுமே அறிவார்கள். மிகவும் அனுபவம் வாய்ந்த பெரிய நடிகர் என்பதாலேயே அனைவரும் அவரிடம் ஒரு டிஸ்டன்ஸ் கீப்பப் பண்ண ஆரம்பித்து விட்டனர்.
ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் சிவாஜி கணேசன் சேர்ந்து நடித்தார் என்றால் அந்த படம் நிச்சயமாக ஒரு சூப்பர் ஹிட் தான். இவர் ரஜினிகாந்துக்கு தந்தையாக படையப்பா படத்தில் நடித்ததே இவருக்கு கடைசி படம்.
சிவாஜிகணேசன், கமலுடன் தேவர் மகன் படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நடிகர் திலகத்தின் நடிப்பிற்காகவே இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
தேவர்மகன் படத்தில் சிவாஜிக்கு ஈடுகொடுத்து நடிப்பதற்கு மிகவும் சிரமப் பட்டதாக கமல் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு ஈடு கொடுத்து இந்தப் படத்தில் மாயன் கதாபாத்திரத்தில் நாசர் தன் பங்கிற்கு மிரட்டியிருப்பார். இந்த படம் இவர்களுக்கு இன்று வரை மறக்க முடியாத சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இந்த படத்தில் வரும் பஞ்சாயத்து காட்சியில் சிவாஜி செய்யும் அக்கப்போருக்கு அளவே கிடையாது. ஒருகட்டத்தில் நாசர் இவரை எடுத்தெறிந்து பேசிவிடுவார் அதற்காக சிவாஜி கணேசன் உட்கார்ந்த நாற்காலியை தூக்கி அடித்து பேசும் வசனம் இன்று வரை மறக்கமுடியாத ஒன்று .
இந்த படத்தில் சிவாஜி இறந்த பின்னர் அந்த நாற்காலியில் கமலை உட்கார வைத்து அழகு பார்ப்பார்கள். இந்த காட்சியை சூட்டிங் ஸ்பாட்டிலேயே சிவாஜி கணேசன் கலாய்த்து தள்ளி விட்டாராம். நான் போன பிறகு என் இடத்திற்கு நீ தான் வருவாய் என்று சொல்லாமல் சொல்கிறாயோ என்று கமலைப் பங்கமாய் கலாய்த்து மொத்த கூட்டத்திலும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி விட்டாராம்.