டாப் நடிகர்களை டம்மி ஆக்கும் சிவகார்த்திகேயன்.. டாப் நடிகர்களின் நிலைமை

Sivakarthikeyan : சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு சிறிய ரோலில் நடித்து இன்று மிகப்பெரிய உச்சத்தில் உள்ளார். கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்தாலும். இந்த இடத்தை தக்கவைத்து கொள்ள இன்றளவும் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்.

இன்று டாப்பில் இருக்கும் சில நடிகர்களுக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் இருக்கிறார். இவர் இன்னும் உயரத்தை அடைவதற்காக சில வேலைகள் செய்து வருவதாக செய்திகள் பரவுகிறது.

டாப் நடிகர்களின் நிலைமை..

இவரை வளர்த்து கொள்வதற்காக பிரபலமான நடிகர்களை இவருக்கு வில்லனாக நடிக்க அழைப்பு விடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். அதாவது முதலில் இவரது படத்தில் ஜெயம் ரவியை, இவருக்கு வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து முடிவாகியும் விட்டன. பராசக்தி படத்தில் வில்லன் ரோலில் ஜெயம் ரவி நடிக்கிறார்.

இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தில் ஆர்யா வில்லன் கதாபாத்திரம் செய்ய போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதே போல் இவருக்கு வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடமும் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் கசிந்து வருகின்றன.

அப்போ தன்னை வளர்த்துக்கொள்ள, இதுபோல பிரபலமான நடிகர்களை வில்லனாக நடிக்க வைத்து அவர்களின் மார்க்கெட்டை காலி செய்ய பார்க்கிறாரா? சிவகார்த்திகேயன் என்றெல்லாம் திரை பிரபலங்கள் பேசி வருகிறார்களாம்.

அப்படி சிவகார்த்திகேயன் அழைப்பு விடுத்தாலும் கூட விருப்பம் இருந்தால் மட்டுமே பிரபல நடிகர்கள் நடிக்க போகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இப்போது உள்ள சினிமாவில் ஹீரோ ரோலை விட வில்லனுக்கு தான் ரசிகர்கள் அதிகமாம்.