தன்னை வளர்த்தவரை மிரட்டிய சூர்யா.. காசு கண்ணை மறைக்குது, இயக்குனருக்கு நேர்ந்த கொடுமை

எத்தனையோ படங்களில் நடித்து பெயர் வாங்கி வந்த சூர்யா, கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படத்தின் மூலம் இவருடைய பெயர் ரோலக்ஸ் என்பதற்கு புகழாரம் அடைந்து விட்டார். அந்த அளவிற்கு இவருடைய கேரக்டர் நின்னு பேசுகிறது. வந்தது என்னமோ 10 நிமிடம் தான். ஆனால் விக்ரம் படம் என்று சொன்னதும் இவர் பெயர் இல்லாமல் இருக்காது அந்த அளவிற்கு வந்து பெரிய சம்பவத்தை செய்து விட்டார்.

இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிப்பதற்கான எல்லா வேலைகளும் நடைபெற்றது. இதற்காக இரண்டு மாதம் படப்பிடிப்பும் முடிந்தது. மேலும் இப்படத்திற்கு இவரே தயாரிப்பாளராக சூர்யாவின் 2டி நிறுவனம் தான் பொறுப்பேற்றது. அடுத்து இப்படத்திற்கான சூட்டிங் ஆரம்பித்த நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் பாதிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது.

அத்துடன் இந்த படத்தில் இனிமேல் நான் நடிக்கப் போவதில்லை என்று சூர்யா சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. ஆனால் பாலா எப்படி என்று எல்லாத்துக்குமே தெரியும். அதிலும் சூர்யாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஏனென்றால் அவர் இயக்கத்தில் பிதாமகன் மற்றும் நந்தா படங்களில் நடித்திருக்கிறார்.

அப்படி இருக்கையில் அவருடைய கேரக்டர் எப்போதுமே இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்தும் பாலா கோபப்பட்டதற்கு சூர்யாவிற்கு ஒத்து வராமல் போய்விட்டது. பாலா எப்போதும் போல தான் இருக்கிறார். ஆனால் சூர்யா தான் முன்பு போல் இல்லாமல் தற்போது வளர்ந்து நிற்பதால் தன்னை மதிக்காமல் பாலா இப்பவும் இந்த மாதிரி செய்வது அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் இந்த ப்ராஜெக்ட்டில் தொடர்ந்து நடிக்க முடியாமல் சூர்யா வெளியேறி விட்டார்.

அடுத்ததாக கொஞ்ச நாள் கழித்து பாலா, சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்தார். இதை தெரிந்த சூர்யா, பாலாவிடம் வணங்கான் படத்திற்கு செலவு செய்த ஏழு கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதோடு விடாமல் அவர் தர முடியாது என்று சொன்னால் நீதிமன்றம் வரை செல்வேன். படத்தையும் எடுக்க விட மாட்டேன் என்று மிரட்டி உள்ளார்.

பாலாவுக்கும் வேறு வழி இல்லாமல் சூர்யா கேட்ட ஏழு கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சினிமாவை பொறுத்தவரை சூர்யாவை இந்த அளவுக்கு வளர்த்து விட்டவர் என்று சொன்னால் அது பாலா தான். அதை கூட நினைத்துப் பார்க்காமல் காசு கண்ணை மறைத்து விட்டது. சூர்யா இப்படி செய்வது நியாயமா இத்தனை நாளாக நல்லவர் போல் நடித்து வந்திருக்கிறார் என்று இவரை பற்றி பேசி வருகிறார்கள்.