சொதப்பிய சினிமா என்ட்ரி.. மீண்டும் பழைய ரூட்டுக்கு திரும்பிய பப்லி நடிகை

வளர்ந்து வரும் நடிகைகள் பலருக்கும் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஒரு ஆசையினால் பயங்கர திட்டம் போட்டு வெள்ளி திரையில் என்ட்ரி கொடுத்த ஒரு நடிகை போன வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்து போல திரும்பி இருக்கிறார். இப்போது ரசிகர்களை கவர பழைய ரூட்டுக்கு திரும்பிய அந்த நடிகையைப் பற்றி தான் ஒரே பேச்சாக கிடக்கிறது.

சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு பெருமளவில் பரீட்சையமானவர். அதிகாலை நேரத்தில் அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட் செய்து இவர் வெளியிடும் போட்டோக்களை பார்ப்பதற்கே தனி கூட்டம் இருக்கும். அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை பெற்றிருந்த ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஆனால் அழகு பதுமையான அவர் அந்த நிகழ்ச்சியில் பொம்மை போலவே இருந்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் அவருக்கு உலகநாயகனின் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பா என பலரும் அதிசயித்த நிலையில் படத்தை பார்த்த பலரும் இதற்கு தான் இவ்வளவு பில்டப்பா என்று அசிங்கப்படுத்தினர்.

மூன்று மனைவிகளில் ஒருவராக அந்த படத்தில் நடித்த ஷிவானி அதற்கு அடுத்து ஒரு சில திரைப்படங்களில் குத்தாட்ட நாயகியாக வந்து சென்றார். இருப்பினும் இவர் கவனிக்கப்படாத நடிகையாக மாறிவிட்டார். இப்படி சினிமா கனவு நிராசையான சோகத்தில் அவர் மீண்டும் பழைய ரூட்டுக்கே திரும்பி ரசிகர்களை கவர முடிவு செய்துள்ளாராம்.

அந்த வகையில் அவர் இப்போது சதா நேரமும் சோசியல் மீடியாவே கதியென இருக்கிறாராம். ஆனால் இப்போது சோஷியல் மீடியாவில் போட்டி போட்டுக் கொண்டு பல நடிகைகளும் கவர்ச்சி போட்டோக்களை இறக்கி வருகின்றனர். அதிலும் 40 வயதை கடந்த ஆன்ட்டிகள் இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கின்றனர்.

இதனால் சிவானி வெளியிடும் போட்டோக்களுக்கு முன்பு போல அதிக மவுசு கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத அவர் படு கிளாமராக போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதை வைத்து மீண்டும் சினிமாவில் கை நிறைய வாய்ப்புகளை அள்ளலாம் என்று அவர் பிளான் போட்டுள்ளார். அவருடைய திட்டம் எந்த அளவுக்கு பலிக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.