Sivakarthikeyan : சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இன்று ஊரே வரவேற்கும் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் காமெடி கலந்த குடும்பப்பாங்கான கதையை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். மெரினா, எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, டான் போன்ற படங்களில் தன் அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி திரையில் ஹிட் கொடுத்து தனக்கென்று ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தவர் SK.
கோட் திரைப்படத்தில் விஜய் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கி கொடுத்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று கூவ ஆரம்பித்து விட்டார்கள். சிவகார்த்திகேயனின் இமேஜ் இப்படி படிப்படியாக உயர்ந்து. விஜய், அஜித் பிரபலங்களின் வரிசையில் தனக்கென ஒரு தனிப்பட்டாலத்தை சேர்த்தார் SK.
இதன் பின் கோட் திரைப்படம் வெளியான அதே ஆண்டே (2024) அமரன் என்ற உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்தது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் ராணுவ கெட்டப் அவரது பாடி ஸ்லாங் இதெல்லாம் ஒரிஜினலாகவே திரையில் தோன்றியது.
இரு வேறு கெட்டப்..
தற்போது சிவகார்த்திகேயனின் மதராசி திரைப்படம் அப்டேட் வந்துள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் செப்டம்பர் 5, 2025 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இது ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது.
இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் இரண்டு தோற்றங்களில் வருகிறார். ஒரு தோற்றம் அதிக தாடியுடன், மற்றொன்று சேவ் பண்ணி சுத்தமாக தாடி இல்லாமல் காட்சியளிக்கிறார். இதைப் பார்த்த SK ரசிகர்கள் நடிகர் சிம்பு கெட்டப் எல்லாம் அந்தப் பக்கம் தான் நிக்கணும். அந்த அளவுக்கு சிவகார்த்திகேயனின் கெட்டப் மாஸாக இருக்கிறது என்று வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
