கமல் என்ற பெயர் எப்போதுமே பரபரப்பான ஒன்றாகவே இருக்கிறது. இவ்வளவு நாட்களாக தேர்தலில் பிஸியாக இருந்த கமல்ஹாசன் தற்போது மீண்டும் தன்னுடைய தாயிடமான சினிமாவுக்கு வந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் எலக்சன் விஷயத்தில் கொஞ்சம் கைமீறி செலவாகி விட்டதால் அதை எல்லாம் சில வருடங்களில் புரட்டி ஆக வேண்டும் என முடிவு செய்து ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.
அந்தவகையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டெக்னீஷியன்கள் பற்றிய அப்டேட்களை விட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் கமல்ஹாசனை தவிர விக்ரம் படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள்? என்ற தகவலை வெளியிடாமல் வைத்துள்ளனர். மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதனைத் தொடர்ந்து அஞ்சாதே நரேன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதுவும் கிட்டத்தட்ட உறுதியான நிலையில் சம்பள விஷயத்தில் கமலுக்கும் விஜய் சேதுபதிக்கும் கொஞ்சம் முரண்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
தற்போது இந்திய அளவில் செம மார்க்கெட் வைத்திருக்கும் விஜய் சேதுபதி அதே அளவு கமலிடம் எதிர்பார்த்துள்ளார். தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கவும் ரெடியாக இருக்கின்றனர். அதே சம்பளத்தை கமலிடம் கேட்க, நீங்க கிளம்புங்க தம்பி என்று கமல் சொல்ல, ஓகே என வண்டியை கிளப்பி விட்டாராம் விஜய் சேதுபதி.