செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜல்லிக்கட்டு ஜூலியை போல பிக்பாஸில் மீண்டும் ஒரு சிங்கப்பெண்.. இப்பவே ரூட்டை கிளியர் பண்ணிய கமல்

Bigg Boss Season 7 Contestant: சின்னத்திரை ரசிகர்களின் இஷ்டமான என்டர்டைன்மென்ட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பேமஸ் ஆனவர் ஜல்லிக்கட்டு ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக குரல் கொடுத்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற்றார்.

ஜூலி ஜல்லிக்கட்டு மூலம் பிக் பாஸில் தலை காட்டி, அசிங்கப்பட்டு சென்றார். அவரைப் போலவே இப்பொழுது ஒரு சிங்கப் பெண் உருவாகியுள்ளார். இதற்காக அந்த சிங்க பெண்ணுக்கு உலகநாயகன் கமலஹாசனும் ரூட்டை கிளியர் பண்ணி கொடுத்திருப்பது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: வரப்போகுது பிக்பாஸ் சீசன் 7.. சண்டைக்கோழிகளாக சீறப்போகும் பிரபலங்களின் லிஸ்ட் இது தான்

அந்த போட்டியாளர் கமலை நேரில் சென்று பார்த்து, எல்லாத்தையும் உறுதிப்படுத்தி விட்டு வந்துவிட்டார். கூடிய விரைவில் அவரை அடுத்த சீசன் பிக்பாஸில் எதிர்பார்க்கலாம். அவர்தான் கோயம்புத்தூரை சேர்ந்த பெண் டிரைவர் சர்மிளா.

இவர் கோயமுத்தூரில் தனியார் பேருந்து முதல் பெண் ஓட்டுனராக பேமஸ் ஆகி கலக்கிக் கொண்டிருந்தார். அவர் ஓட்டிய பேருந்தில் ஏறி வந்த எம்.பி கனிமொழி அவரை பாராட்டினார். ஆனால் அதே பேருந்தின் நடத்துனர் கனிமொழியை டிக்கெட் வாங்க சொல்லி இருக்கிறார்.

Also Read: 28 வருடங்களாக ஒதுங்கி இருந்த கமல்.. பாகுபலி நாயகனால் வந்த திடீர் மன மாற்றம்

எப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் டிக்கெட் கேட்பது என, சர்மிளாவிற்கும் அந்த நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனையில் முடிந்தது. இதனால் சர்மிளா அந்த வேலையை விட்டு நின்றுவிட்ட பின், இவருக்கு கமல் ஒரு காரை பரிசாக கொடுத்துள்ளார்.

பெண் பேருந்து ஓட்டுநராக சர்மிளாவின் துணிச்சலைப் பாராட்டியவர்கள், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என தெரிந்ததும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். இருப்பினும் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு வெளியில் தலைகாட்ட முடியாமல் கதறிய நிலை சர்மிளாவிற்கு வராமல் இருந்தால் சரி தான்.

Also Read: வறுமையை வைத்து எடுக்கப்பட்ட மறக்க முடியாத 5 படங்கள்.. வேலையில்லா இளைஞரின் பசி கொடுமையை காட்டிய கமல்

Trending News