Kalki Flim: கமல் படங்களில் நடிப்பதில் உச்சக்கட்ட அசுரத்தனத்தை காட்டி விடுவார். அதிலும் தமக்கு டப் கொடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களுடன் போட்டி போட்டு நடிப்பதில் இவருக்கு அலாதிய பிரியம் உண்டாம். அப்படி சமீபத்தில் கமல் நடித்துக் கொண்டிருக்கும் மூன்று படங்களிலுமே அரக்கத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாராம்.
இந்தியன் 2 சேனாதிபதி தாத்தாவாக 90 வயது மதிக்கத்தக்க பெரியவர் கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கமல். மொத்த யூனிட்டயுமே பெரியவர் கெட்ட பில் மிரள விட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சங்கரே பிரமிக்கும் அளவிற்கு நடிப்பு உச்சத்தை காட்டி இருக்கிறார் கமல்.
மணிரத்தினத்தின் தக்கலைப் படத்தில் முற்றிலும் வேறு விதமான கதாபாத்திரம். ரங்கராய சக்திவேல் நாயக்கர் கெட்டபில் அப்படியே வேறு ஒரு ரூபத்தை காட்ட வேண்டும். இந்த படத்திலும் மொத்த செட்டையும் அலற விட்டிருக்கிறார்.
கல்கி 2989AD படத்தில் வில்லனாக நடிக்கிறார் உலக நாயகன். இந்த படத்தில் மொத்தம் வெவ்வேறு மொழிகளில் இருந்து 5 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். ஐந்து பேர் நடித்தும் இவர்களை மிஞ்சி, கமல் பெர்பார்ம் பண்ணி விடுகிறாராம்.
19 நிமிடங்களிலேயே உலகநாயகன் செய்த அட்ராசிட்டி
கல்கி படத்தில் கமலுடன் ,அமிதாப்பச்சன், பிரபாஸ், துல்கர் சல்மான், விஜய் தேவர் கொண்டா ,பசுபதி ராஜேந்திர பிரசாத் என ஏகப்பட்ட நடிப்பு ஜாம்பவான்கள் இதில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் வெறும் 19 நிமிடம் மட்டும்தான் கமல் நடித்திருக்கிறாராம். ஆனால் மத்த எந்த கேரக்டரும் கமல் அளவிற்கு எடுபடவில்லையாம்.