திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

அக்டோபர் 4இல் தியேட்டரில் வெளியாகும் 7 படங்கள்.. லப்பர் பந்து, மெய்யழகன் வசூலுக்கு வந்த சிக்கல்

October 7 Release Movies: கடந்த வாரம் கார்த்தியின் மெய்யழகன், விஜய் ஆண்டனியின் ஹிட்லர் மற்றும் சதீஷின் சட்டம் என் கையில் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. இதில் மெய்யழகன் படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்து வசூலும் வாரி குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் அக்டோபர் 4 ஆம் தேதி 7 படங்கள் வெளியாகிறது.

துரைமுருகன் இயக்கத்தில் ஜேம்ஸ் கார்த்திக் கதையில் உருவாகி இருக்கும் சீரன் படம் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இப்படத்தில் இனியா, சோனியா அகர்வால் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளார். அடுத்ததாக வாட்ஸ்ஆப் மூலம் விபரீதத்தை சொல்லும் கதைக்களமாக ஒரே பேச்சு ஒரே மூச்சு என்ற படம் உருவாகி இருக்கிறது.

அடுத்ததாக க்ரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது அப்பு படம். இந்த படத்தை அயோத்தி பட இயக்குனர் வினோத் இயக்கியிருக்கிறார். அடுத்ததாக இதே நாளில் தியேட்டரில் ஆரகன் படம் வெளியாகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

அக்டோபர் 7 தியேட்டரில் வெளியாகும் படங்கள்

இதுதவிர செந்தா இயக்கத்தில் செல்ல குட்டி, வேட்டைக்காரி, நீல நிற சூரியன் போன்ற படங்களும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகிறது. மேலும் தெலுங்கில் உருவான காஜல் அகர்வாலின் சத்தியபாமா படம் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

இவ்வாறு இந்த வாரமும் பல சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகிறது. இதனால் இப்போது தியேட்டரில் வசூல் செய்து வரும் லப்பர் பந்து, மெய்யழகன் போன்ற படங்களின் வசூல் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கோட் படமும் இப்போது வரை தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படங்கள் இந்த வாரம் வெளியாகாத நிலையில் அடுத்த வாரம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் வேட்டையன் போன்ற பெரியார் நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களை குதுகளிக்க செய்ய உள்ளது.

வசூலை குவிக்கும் ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து

Trending News