Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அந்த லெவலை காப்பாற்ற படாதபாடு படும் சிம்பு.. எனக்கு வேற வழி தெரியல பாஸ்

அந்த லெவலை காப்பாற்ற படாதபாடு படும் சிம்பு.. எனக்கு வேற வழி தெரியல பாஸ்

நடிகர் சிம்பு இப்போது தான் நல்ல பிள்ளையாக மாறி சினிமாவில் ஒழுங்காக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடித்த படங்களில் வாயை குறைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்திய அத்தனை படங்களும் அவருக்கு ஹிட் கொடுத்திருக்கின்றன. அப்படி சமீபத்தில் வெளியான சிம்புவின் […]

நடிகர் சிம்பு இப்போது தான் நல்ல பிள்ளையாக மாறி சினிமாவில் ஒழுங்காக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடித்த படங்களில் வாயை குறைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்திய அத்தனை படங்களும் அவருக்கு ஹிட் கொடுத்திருக்கின்றன. அப்படி சமீபத்தில் வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் அவரின் தேவையில்லாத பஞ்ச் வசனங்கள் இல்லாமல் கதைக்காக மட்டும் படம் எடுக்கப்பட்டு இருந்ததால் படம் நல்ல ஹிட்டடித்தது.சிம்புவும் அதில் சிறப்பாக நடித்தும் இருந்தார்.

இந்த படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, இந்த படம் செய்த வசூலால், இயக்குனர்களில் வசூல் மன்னர்கள் லிஸ்டில் வெங்கட்பிரபு இணைந்து கொண்டார். அதே போல சிம்புவும் ஹீரோக்களில் வசூல் மன்னன் லிஸ்டில் இணைந்து விட்டார். படம் 100 கோடி அளவிற்கு வசூல் செய்ததாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெருமையோடு தெரிவித்திருந்தார். அதனால் இந்த படம் வந்த பிறகு சிம்புவின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது.

தற்போது சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் நடித்து முடித்த பிறகு அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் ஆரம்பிக்கும் சமயத்தில் அதாவது மாநாடு படம் வருவதற்கு முன்னால் சிம்புவின் மார்க்கெட் சொல்லிக்கொள்ளும் அளவிற்ககு பெரிதாக இல்லை.

ஆனால், தற்போது மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவின் மார்க்கெட் எகிறி இருக்கிறது. இப்போது சிம்பு எங்கேயோ போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இதனால் இந்த கொரோனா குமார் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது . அதனால் சாதாரணமாக இந்த படம் இருந்து விடக்கூடாது என்பதற்காகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் படத்தை மெருகேற்ற படக்குழு முடிவு செய்திருக்கிறது.

அதனால் இந்த படத்தை வேறு மாதிரி எடுக்க படக்குழு திட்டம் தீட்டி வருகிறது. படத்தில் உள்ள அனைத்து டெக்னீசியன்களையும் மாற்றி படத்தை தரமான படமாக சிம்புவின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக மாற்ற படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக தற்போது தமிழில் பல படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் பகத் பாசிலிடம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பாசில் வில்லனாக நடிக்கும் பட்சத்தில் மாநாடு திரைப்படம் போல சிம்புவிற்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரமாக இந்த படம் அமையும் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்திருக்கும் நடிகர் சிம்பு அடுத்து இந்த படத்தில் உடல் எடையை ஏற்றி பிட்டாக நடிக்க இருக்கிறாராம்.

அவருடைய மார்க்கெட் எகிற எகிற இனி சிக்ஸ் பேக் வைக்க சொன்னாலும் வைப்பார் போல அந்த அளவிற்கு சிம்பு சினிமாவில் முன்பு செய்த சேட்டைகள் அனைத்தையும் சுருட்டி வைத்துவிட்டு அவரை கிண்டல் செய்த அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் திளைக்கின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.