கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து வருத்தப்பட்ட 4 பேர்.. ஆறு ரண்களில் மன உளைச்சலுக்கு ஆளான கே எல் ராகுல்

இந்தியா, ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய ஆதிக்கம் செய்தாலும் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் சுருண்டது. ஜடேஜா அற்புதமாக பந்து வீசிஆஸ்திரேலியா அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சரித்தார்.

199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது ஆஸ்திரேலியா அணி. அதன் பின்னர் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. அணியின் ஸ்கோர் இரண்டு ரன்கள் இருக்கும்போது வரிசையாக ரோஹித் சர்மா, இசான் கிஷான், ஷ்ரேயஸ் ஐயர் போன்ற 3 முக்கியமான வீரர்கள் டக் அவுட் ஆகினார்கள்.

அதன் பின்னர் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் நங்கூரம் போல் நின்று அணியை மீட்டெடுத்தனர். 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தனர். வெற்றிக்கு 5 தேவைப்படும் நேரத்தில் கே எல் ராகுல் பவுண்டரி அடிக்க நினைத்தார் ஆனால் அது சிக்ஸர் ஆக போய் அவருக்கு மன உளைச்சலை தந்தது.

ஐந்து ரன்களில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தால் கே எல் ராகுல் சதம் அடிப்பார் ஆனால் அவர் அடித்த பந்து பவுண்டரி போகாமல் சிக்ஸர் சென்று 97 ரன்களில் அவுட் ஆகாமல் வெளியேறினார் ராகுல். வெற்றி பெற்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் அவர் சதம் அடிக்க முடியாத வருத்தமே அவரிடம் நிறைய தெரிந்தது.

இவரை போலவே இதற்கு முன்னர் இரண்டு வீரர்கள் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் அவுட் ஆகாமல் சதத்தை மிஸ் செய்துள்ளனர். ஏ பி டி வில்லியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு போட்டியில் 92 ரன்களில் இருக்கும் போது வெற்றி பெற ஐந்து ரன்கள் தேவைப்பட்டது அப்பொழுது பவுண்ட்ரி அடிக்க நினைத்தவருக்கு சிக்ஸர் போய் ஏமாற்றம் தந்தது.

இவர்களைப் போலவே மற்றொரு இரண்டு வீரர்கள் சிக்ஸர் போனதால் மிகவும் ஏமாற்றம் ஆனார்கள். ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் இப்படி நடந்ததால் அப்செட் ஆனார். இவரை போலவே டேவிட் வார்னரும் ஒரு போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →