கடந்த வருடத்தில் கோடிகளில் புரண்ட 5 வீரர்கள்.. கிரிக்கெட்டில் இவருக்கு மட்டுமே இடம்

ஸ்போர்டிகோ என்ற விளையாட்டு நிறுவனம் கடந்த வருடம் விளையாட்டு வீரர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த 100 இடங்களில் குறிப்பிட்ட 5 இடங்களை யார், எந்த நாட்டு வீரர்கள் வீரர்கள் பிடித்திருக்கிறார்கள் என்பதை பட்டியலிட்டுள்ளது.

1.லிப்ரான் ஜேம்ஸ்: கடந்த ஆண்டு மட்டும் இவர் 974 கோடிகள் சம்பாதித்து அசத்தியிருக்கிறார். இவர்தான் இந்த லிஸ்டில் முதல் ஆளாக இருக்கிறார். உலகில் முதல் பணக்கார விளையாட்டு வீரர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் இப்படி ஒரு வீரர் சம்பாதிப்பதை யாரும் கேள்விபட்டிருக்கமாட்டார்கள்.

2.லியோனல் மெஸ்ஸி:  2வது இடத்தை கால்பந்து ஜாம்பவானான மெஸ்ஸி பிடித்துள்ளார். அவர் கடந்த 12 மாதத்தில் 943 கோடியை ஈட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நாட்டில் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

3.கிறிஸ்டியானோ ரொனால்டோ: 3வது இடத்தை பிடித்துள்ளார் ரொனால்டோ. இவர் கடந்த ஆண்டு மட்டும் 889 கோடிகள் சம்பாதித்து அசத்தி உள்ளார். உலகத்திலேயே அதிகமான ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது.

4.ரோஜர் ஃபெடரர்: நான்காவது இடத்தை பிடித்துள்ளார் ரோஜர் ஃபெடரர் இவர் 796 கோடி ரூபாயை தன் வசப்படுத்திஉள்ளார். இன்றுவரை டென்னிசில் கொடிகட்டி பறந்து வருகிறார் ஃபெடரர். இவரை நம்பர் ஒன் இடத்தில் இருந்து இறங்க செய்ய முடியவில்லை.

5. விராட் கோலி: கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் ஒரே ஒரு வீரர் தான் இடம் பெற்றிருக்கிறார். கிரிக்கெட்டில் முதலாவது பணக்கார வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இவர் கடந்த 12 மாதத்தில் 261 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளார்.ஆனால் இவருக்கு கிடைத்தது என்னமோ 61வது இடம் தான்.

shankar

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். சினிமா ரசிகர்களுக்கு உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →