வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு லவ்வரா? விராட் கோலி, அனுஷ்கா போல உருவாகும் அடுத்த காதல் ஜோடி புகைப்படம்

கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளை திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை விராட் கோலி காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இப்போது இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் விராட் கோலி- அனுஷ்கா சர்மா போல இதே காம்பினேஷனில் இன்னொரு காதல் ஜோடியும் இணைந்து இருக்கின்றனர். இவர்களின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. நான்கு வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட்டில் பௌலிங், பேட்ஸ்மேன் மட்டுமின்றி அவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பரும் கூட.

மேலும் தமிழகத்தை சேர்ந்த இவர் லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் மற்றும் மீடியம் ஸ்பேஸ் என்று பந்து வீச்சில் பல திறமைகளை கொண்டுள்ளார். இவ்வாறு ஆல் ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கும் வாஷிங்டன் சுந்தர் தெலுங்கு பட நடிகையும் தொகுப்பாளினியுமான வர்ஷினி என்பவரை காதலிக்கிறார்.

இவர்கள் இருவரும் கடந்து சில நாட்களாக ஒன்றாக காதல்பறவை போல் சுற்றி திரிகின்றனர். மேலும் இரவு பார்ட்டிக்கும் சென்று வருகின்றனர். இவர்கள் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே எஸ்ஆர்எச் அணி வீரரான வாஷிங்டன் சுந்தர் துரதிர்ஷ்டமாக சமீபத்தில் காயம் ஏற்பட்டதால், இந்த வருட ஐபிஎல்-லில் இருந்து விலகி உள்ளார்.

மேலும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் தொகுப்பளிணி வர்ஷினி இருவரும் தங்களுடைய காதலைப் பற்றி பகிரங்கமாக விரைவில் தெரிவிக்க போகின்றனர். அது மட்டுமல்ல சீக்கிரமே இவர்களது திருமணமும் நடக்கப் போகிறது. இந்த காதல் ஜோடியின் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. இவர்களும் விராட் கோலி- அனுஷ்கா சர்மா போல சிறந்த தம்பதியர்களாக இருக்க வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

தெலுங்கு நடிகையை காதலிக்கும் வாஷிங்டன் சுந்தர்

sundhar-varshni-cinrmapettai
sundhar-varshni-cinrmapettai
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →