ஐபிஎல் இறுதி போட்டி நடக்கும் இடம் மற்றும் தேதி.. இந்த முறையும் எதிர்பார்க்கப்படும் அந்த 2 அணிகள்

BCCI Announced IPL final Match and Date: நடக்கும் ஐபிஎல் தொடரில் ஆடும் போட்டிகள் அனைத்தும் எளிதில் கணிக்க முடியாத அளவிற்கு வெற்றியும், தோல்வியும் அமைகிறது. இவர்கள் தான் இதில் வெற்றி பெறுவார்கள் என்று எண்ணுகையில் தோற்று விடுகிறார்கள் இப்படி எதிர்மறை முடிவுகளாக இருக்கிறது.

நடந்து முடிந்த போட்டிகளில் பலமாய்ந்த அணிகள் அனைத்தும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் போட்டிகளின் முழு அட்டவணை வெளியிடவில்லை.

தற்போது இறுதிப் போட்டி நடக்கும் மைதானம் மற்றும் தேதிகள் அறிவித்துள்ளது பிசிசிஐ. பெரும்பாலும் டிக்கெட் முழுவதுமாய் விற்கும் இடத்தை கருத்தில் கொள்வார்கள். அப்படி பார்க்கையில் எப்பொழுதுமே அதற்கு கொல்கத்தா மற்றும் மும்பை தான் சரியான வகையில் இருக்கும்.

இந்த முறையும் எதிர்பார்க்கப்படும் அந்த 2 அணிகள்

இம்முறை ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், மே மாதம் 26 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதுவும் இந்த போட்டியை வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும்படி ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுவரை நான்கு முறை இறுதிப் போட்டியில் மோதி உள்ளது.

இந்த முறையும் இந்த அணிகள் தான் இறுதி போட்டிகளில் மோதும் என எதிர்பார்க்கின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில் சென்னையில் போட்டி நடைபெற்றால் அது உள்ளூர் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும்

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →