அசிங்கப்படுத்தி திகைப்பில் ஆழ்த்திய கே எல் ராகுல்.. தென் ஆப்பிரிக்கா ஆல் ரவுண்டரின் பரிதாப நிலை

KL Rahul Slams South Africa in Different Style: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார் கே எல் ராகுல். இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 208 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கே எல் ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 ரண்களில் களத்தில் நிற்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை 360 வீரர் என்றால் அது ஏ பி டி வில்லியர்ஸ் தான். ஆனால் இந்திய அணிக்கு அந்த பெயர் பொருந்தக்கூடிய ஒரே வீரர் கே எல் ராகுல் தான். ஏ பி டி வில்லியர்ஸ் மைதானத்தில் எல்லா திசைகளிலும் அடித்து அந்த பெயரை வாங்கினார். ஆனால் ராகுல் எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் நான் விளையாடுவேன் என்பதை காட்டி அந்த பெயரை வாங்கி விட்டார்.

இது ஒரு புறம் இருக்க நேற்று நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர் மார்கோ ஜெய்சன் தொடர்ந்து ராகுலை வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார். நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று நங்கூரம் போல் நின்று இந்திய அணி 200 ரன்களை கடக்க பெரிதும் உதவினார் ராகுல்.

ஒரு கட்டத்தில் மார்கோ ஜெய்சன் பந்துகளை பவுண்டரிகள் சிக்ஸர்கள் என அடித்து மிரட்டி விட்டார் ராகுல். இதை சற்றும் எதிர்பாராத ஜெய்சன் அவரை சகட்டுமேனிக்கு வம்பு இழுத்து அசிங்கமாய் திட்டினார். இதையெல்லாம் கவனித்த கே எல் ராகுல் தன் வழக்கமான பானியில் உன் பந்துகளை வெளுத்து விட்டேன் என்பது போல் ஒரு சின்ன புன்னகையில் பதிலளித்தார்.

அவர் சிரிப்பதை பார்த்த ஜெய்சன் இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும் என்று தலையை தொங்க போட்டுவிட்டு நடையை கட்டினார். நேற்றைய போட்டி வெறும் 59 ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டது. இறுதி நேரத்தில் மழை குறுக்கிட்டதால் நேற்றைய தின ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி அபாய கட்டத்திலிருந்து கே.எல். ராகுல் அடித்த 70 ரங்களால் 200 என்ற இலக்கை அடைந்தது. அவருடன் முகமது சிராஜ் 10 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் நிற்கிறார். அவரும் அதன் பின் களம் இறங்க போகும் பிரசித் கிருஷ்ணாவும், ராகுலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தால் இந்திய அணி வலுவான இலக்கை அடையும்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →