மதராஸி-யால் வாங்கிய அடி.. அண்ணனுக்கு வழி விட்ட திடீர் தளபதி

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒவ்வொரு பொங்கலும் புது கிளாஷ் கொண்டுவந்து விடும். குறிப்பாக 2026 பொங்கல் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டது. காரணம் – தளபதி விஜய் நடிக்கும் “ஜனநாயகன்”, சிவகார்த்திகேயன் நடிக்கும் “பராசக்தி”, அதோடு சில பெரிய படங்கள் களம் இறங்கப்போகின்றன என்ற பேச்சு.

ஆனா இப்போது நிலைமை கொஞ்சம் மாறி இருக்கிறது. சமீபத்தில் வெளியான “மதராஸி” படம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. கதை, சீரியஸ் டோன், மற்றும் போட்டி காரணமாக சிக்கலில் சிக்கியது. இதனால், ரசிகர்களிடம் “சிவகார்த்திகேயன் அடுத்த ஸ்ட்ரெடஜி என்ன?” என்ற கேள்வி எழுந்தது.

இதே நேரத்தில், “பராசக்தி” படத்தை பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கும் முடிவு எடுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி விட்டன. தொழில்துறை வட்டாரங்களில் இதற்கான முக்கிய காரணம் – “ஜனநாயகன்” என்ற பேரலைக்கு நேரடி போட்டியாகச் செல்வது அபாயம் தான்” என்பதாக சொல்லப்படுகிறது.

சினிமா வியாபாரிகள் சொல்வதாவது:
“பொங்கல் பண்டிகை ரிலீஸ் என்பதால் ஒவ்வொரு படம் தியேட்டர் கிடைப்பதிலும், வசூல் பண்ணுவதிலும் பெரிய தாக்கம் இருக்கும். விஜய்யின் மார்க்கெட் அத்தனை பெரியது; குறிப்பாக JanaNayagan இயக்குனர் எச்.வினோத் என்பதால் 100% விஜயிசம் கேரண்டி என்று எல்லோருமே சொல்லிக்கொண்டிருக்காங்க. அதனால, Siva Karthikeyan Parasakthi-யை பின் வாங்குவது நல்ல தீர்மானம்தான்.”

ரசிகர்கள் மத்தியில் இப்போது பேசப்படுவது என்னனா – “தளபதிக்கு வழிவிட்ட குட்டி தளபதி” என்ற தலைப்பே! விஜய்யின் அடுத்த படம் பண்டிகை சந்தையில் புயல் போல் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம், சிவகார்த்திகேயனும் வித்தியாசமான கதைகளில் பிஸியாக இருந்து, அடுத்தடுத்த படங்களில் வெற்றி பெறுவதற்காக ஸ்மார்ட் முடிவுகள் எடுத்து வருகிறார்.

பொங்கல் 2026 Clash இப்போது ஒரே ஒருவரின் பெயரைச் சுற்றி சுழன்றுகொண்டிருக்கிறது – அது தளபதி விஜய் தான். ரசிகர்களும், திரையரங்க உரிமையாளர்களும் எல்லாம் ஜனநாயகன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள். அதனால், பொங்கல் 2026ல் “ஜனநாயகன்” தான் ஹாட் டாப்பிக். பராசக்தி பின் வாங்கியதால், “விஜய் ஜாதகம் பலம் பேசுகிறது” என்று ரசிகர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.